தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுமார் 500 மில்லியன் பயனர்களின் தரவு கசிவு ?- வாட்ஸ் அப் மறுப்பு - மெட்டா

சுமார் 487 மில்லியன் பயனர்களின் தொலைபேசி எண்கள் திருடப்பட்டு ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை மெட்டாவிற்குச் சொந்தமான வாட்ஸ் அப் மறுத்துள்ளது.

500 மில்லியன் வாட்ஸ் அப் பயனர்களின் தரவு கசிவு - நிறுவனம் மறுப்பு
500 மில்லியன் வாட்ஸ் அப் பயனர்களின் தரவு கசிவு - நிறுவனம் மறுப்பு

By

Published : Nov 29, 2022, 12:08 PM IST

டெல்லி: 487 மில்லியன் பயனர்களின் தொலைபேசி எண்கள் திருடப்பட்டு, பிரபலமான ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் மறுத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 32 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள், இங்கிலாந்தில் இருந்து 11 மில்லியன் பயனர்கள் மற்றும் ரஷ்யாவிலிருந்து 10 மில்லியன் பயனர்கள் என 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் விற்பனைக்கு இருப்பதாகக் கூறப்படும் தரவுத்தொகுப்பில் இருப்பதாக சைபர் நியூஸ் தெரிவித்தது.

"சைபர்நியூஸில் எழுதப்பட்டுள்ளது ஆதாரமற்ற ஸ்கிரீன் ஷாட்களை அடிப்படையாகக் கொண்டது. வாட்ஸ் அப்பில் இருந்து 'டேட்டா கசிவு' என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பட்டியலில் ஹேக்கர், எகிப்து (45 மில்லியன்), இத்தாலி (35 மில்லியன்), சவுதி அரேபியா (29 மில்லியன்), பிரான்ஸ் (20 மில்லியன்), மற்றும் துருக்கி (20) ஆகிய நாடுகளின் குடிமக்களுக்குச் சொந்தமான செயல்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் எண்களை வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஹேக்கர் அமெரிக்க டேட்டாக்களை $7,000க்கும், UK டேட்டாக்களை $2,500க்கும், ஜெர்மனி டேட்டாக்களை $2,000க்கும் விற்றதாக அறிக்கை கூறுகிறது. சைபர்நியூஸ் ஆராய்ச்சியாளர்கள் ஹேக்கருடன் தொடர்பு கொண்டனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் WhatsApp செயலில் உள்ள பயனர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

எவ்வாறு அந்த டேட்டாக்களை பெற்றார் என்று ஹேக்கர் குறிப்பிடவில்லை, "தங்கள் உத்தியைப் பயன்படுத்தினோம்" என்று மட்டும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டேட்டாக்களை ஹேக்கர்கள் சைபர் கிரைம் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிக்கை கூறியுள்ளது.

இதையும் படிங்க:போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details