டெல்லி:வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தங்களது பயனர்களுக்காகப் பல்வேறு ஸ்டேட்டஸ் அம்சங்களை கொண்டுவந்தது. அதன்படி, 'ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்', 'ஸ்டேட்டஸ் புரொஃபைல் ரிங்', 'லிங்க் ப்ரீவியூ' உள்ளிட்டவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யப்பட்டது.
இதில், ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ் என்பது, நமது நண்பர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜிகள் மூலமாக நாம் ரியாக்ட் செய்ய அனுமதிக்கிறது. ஸ்டேட்டஸ் புரொஃபைல் ரிங் என்பது, நமது வாட்ஸ்அப் நண்பர்கள் புதிதாக ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும்போது, அதனை நமக்கு காண்பிப்பதற்காக அவர்களது புரொஃபைல் போட்டோவில் பச்சை நிற வளையம் தோன்றும்; அதனை தொட்டால் அவர்களது ஸ்டேட்டஸை நம்மால் பார்க்க முடியும்.
லிங்க் ப்ரீவியூ என்பது, ஸ்டேட்டஸ்களில் பதிவிடப்படும் லிங்குகளில் உள்ள கன்டென்ட்டை கிளிக் செய்யாமலேயே பார்க்க வழிசெய்கிறது. அதாவது, ஸ்டேட்டஸில் உள்ளது என்ன வீடியோ? என்பதை நம்மால் ப்ரீவியூவாக பார்க்க முடியும். இந்த அம்சங்களைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது மேலும் சில ஸ்டேட்டஸ் அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
'வாய்ஸ் ஸ்டேட்டஸ்', 'பிரைவேட் ஆடியன்ஸ் செலக்டர்', 'ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்' உள்ளிட்ட புதிய அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் வாய்ஸ் ஸ்டேட்டஸ், வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸில் வைக்க அனுமதிக்கிறது. அதன்படி, 30 விநாடிகளுக்கு வாய்ஸ் மெசேஜ்களை ரெக்கார்டு செய்து அப்டேட் செய்யலாம்.
அதேபோல் ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ் அம்சத்தில் கூடுதலாக எமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிரைவேட் ஆடியன்ஸ் செலக்டர்' என்ற அம்சம், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன்பாக, நமக்கு விருப்பமான நபர்களை தேர்வு செய்ய பயன்படுகிறது.
தற்போது ஸ்டேட்டஸ் வைப்பதற்கு முன்பாக செட்டிங்கிஸ்சில் சென்று நாம் நபர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். இந்த 'பிரைவேட் ஆடியன்ஸ் செலக்டர்' அம்சம் ஸ்டேட்டஸ் வைக்கும்போதே விருப்பமானவர்களுக்கு குறிப்பிட்டு வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய ஸ்டேட்டஸ் அம்சங்கள் அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: WhatsApp-ல் "ரிப்போர்ட் ஸ்டேட்டஸ்" வசதி - விரைவில் அறிமுகம்!