தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கணவன் - மனைவி பிரச்னைக்கு இதெல்லாம்தான் காரணமா? - தீர்வு இதோ...! - தம்பதியரின் பிரச்சனைக்கு இதெல்லாம் காரணமா

சில சமயங்களில், பல காரணங்களால், தம்பதிகள் இடையே விரிசல் உண்டாகிறது. அவர்கள் ஒன்றாக வாழ்ந்தாலும்கூட, தனிமையிலேயே இருப்பதுபோல் உணர்கின்றனர். இது மன அழுத்தம், சோகம், நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும். இந்த விரிசலுக்கு 3 முக்கியமான காரணங்களே உள்ளன.

தம்பதியரின் பிரச்சனைக்கு இதெல்லாம் காரணமா?
தம்பதியரின் பிரச்சனைக்கு இதெல்லாம் காரணமா?

By

Published : Jul 3, 2022, 5:55 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உளவியலாளர் டாக்டர் ரேணுகா இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

தம்பதிகளாக இருக்கும் இருவர் பல சமயங்களில் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்து விட்டு திடீரென ஒருவர் மட்டும் தங்கள் வழக்கமான பொறுப்புகளில் மூழ்கி விடுவதால், அவர்கள் தங்கள் துணையிடம் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதையோ அல்லது அவர்களை முக்கியமானவர்களாக உணர வைப்பதையும் நிறுத்திவிடுகிறார்கள்.

இது அவர்களது துணையை உணர்ச்சி ரீதியாக தொலைதூரமாக கொண்டு செல்கிறது. இதனால், அந்த துணை விரக்தியாகவும் உணர ஆரம்பிக்கிறார். உறவில் தனிமையாக உணர பின்வரும் காரணங்கள்தான் காரணம் என டாக்டர் ரேணுகா சிலவற்றை விவரிக்கிறார்.

அதிகப்படியான எதிர்பார்ப்புகள்
  1. அதிகப்படியான எதிர்பார்ப்புகள்: தெரிந்தோ தெரியாமலோ தம்பதிகள் அவர்களுக்கிடையே பல எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதாகவும் அவை நிறைவேறாத போது, அவர்களின் துணை குறித்து குறை கூறவும், கோபத்தை வெளிப்படுத்தவும் தொடங்குகிறார்கள் என்றும் டாக்டர் ரேணுகா கூறினார். மேலும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். இதனால் அனைத்து எதிர்பார்ப்புகளும் எல்லா சமயங்களிலும் நிறைவேற்றப்படுவதில்லை. ஏனென்றால் சில நேரங்களில் நிதிச்சிக்கல்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் குடும்ப பொறுப்புகள் போன்ற பல விஷயங்களால் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்ற முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், தம்பதிகள் ஒருவொருக்கொருவர் தொடர்பு கொள்ளாமல் இருப்பதனால் அத்தகைய பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் மற்றும் இவை இருவருக்கும் இடையே உணர்ச்சிகரமான பிரிவை ஏற்படுத்தும்.
  2. அன்புக்குறைவு: அன்புக்குறைவு ஏற்படும் சூழ்நிலையில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அதிகம் தொடர்பு கொள்ள மாட்டார்கள் மற்றும் ஒன்றாக வாழ்ந்தாலும் தனிமையில் இருப்பதுபோல் உணரத் தொடங்குகிறார்கள். ஏனென்றால், இருவருக்குமான உறவின் ஆரம்பத்தில் இருவரும் அதிகமாகப்பேசுகிறார்கள். ஒருவருக்கொருவர் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் அவர்களது துணையை கவர்ச்சி செய்ய முயற்சிக்கிறார்கள். இது ஒருவரையொருவர் ஈர்க்கிறது மற்றும் அவர்களை நெருக்கமாக கொண்டுவருகிறது. இருப்பினும் காலப்போக்கில் வேலை, குடும்பம், நிதி மற்றும் குழந்தைகளின் பொறுப்புகள் அதிகரிக்கும்போது அவர்களின் ஈடுபாடு அதில் அதிகரிக்கிறது. இந்நிலையில் இருவரும் உணர்ச்சி ரீதியாக ஒருவரை விட்டு ஒருவர் தொலைவில் சென்றதாக உணர்கிறார்கள்.
    அன்புக்குறைவு
  3. உறவுகளில் பழிவாங்குதல்:சில சமயங்களில் ஒருவரின் அன்பு மற்றும் உடல் சார்ந்த தேவைகள் வீட்டில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் தம்பதியினர் தங்கள் வீட்டிற்கு வெளியே அதைத் தேடுகிறார்கள். மேலும் தங்கள் துணையைத் தவிர அவர்களது உடன் பணியாற்றுபவர்கள் அல்லது வேறு நபர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். இது விரைவாக காதல் மற்றும் திருமணம் மீறிய உறவாக மாறுகிறது. இருப்பினும் இது இருந்தபோதிலும் சிலர் அதனை எதிர்க்கவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் உடைந்த நம்பிக்கையுடன் ஒன்றாக வாழ்கிறார்கள். இது ஒருவருக்கொருவர் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும். இதன் மூலம் உறவில் விரிசல் நிரந்தரமாகவும் வாய்ப்பு உள்ளது.
    உறவுகளில் பழிவாங்குதல்

இதற்கான தீர்வாக டாக்டர் ரேனுகா கூறுகையில், தம்பதியினர் வயது வித்தியாசமின்றி அவர்களது துணையை மதித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.

இருவருக்கும் இடையே உள்ள உறவு என்பது அன்பு, மரியாதை, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் தொடர்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே, தம்பதிகள் உறவில் சிக்கல் ஏற்பட்டால் அதைப் பற்றி அவர்களது துணையிடம் வெளிப்படையாகப்பேசுவது நல்லது. இது அவர்கள் தங்களின் உறவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. ஒரு உறவில் ஏற்படும் பிரச்னை குறித்த ஆலோசனை பெறுவற்கு ஒருவர் அவரது நண்பர்கள், குடும்பத்தினர் உதவியை நாடலாம். இதையெல்லாம் மீறி, பிரச்னை தொடர்ந்தால் உறவு சம்பந்தப்பட்ட உளவியலாளர்களை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் எனக் கூறினார்.

இதையும் படிங்க:மாதவிடாய் முதல் கருத்தரித்தல் வரை - பெண்களுக்கு உதவும் வாட்ஸ் அப் செயலி

ABOUT THE AUTHOR

...view details