ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்றெழுத்து மந்திரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் விளையாட்டுகள்! - how valentines day formed

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். அந்த காதலர் தினத்தில் பின்னால் அரங்கேறும் அறிவியல் ஆட்டம் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு.

Valentine's Day
வேலன்டைன் டே
author img

By

Published : Feb 14, 2021, 2:51 PM IST

உலகம் முழுவதும் பறந்து கொண்டிருக்கும் காதல் புறாக்கள் இணையும் நாள்தான் பிப்ரவரி 14. ரொமாண்டிக் இடங்களில் குவியும் காதலர்கள், தங்களது அன்பை வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள். ரோஸ் டே முதல் வேலன்டைன் டே வரையிலான காதல் விளையாட்டு, இளசுகள் முதல் பெரியவர்கள்வரை களை கட்டுகிறது. காதலுக்குக் கண் கிடையாது என்பதைப் போலவே, வயதும் இல்லை. அத்தகைய காதலர் தினத்தில், மறைந்திருக்கும் ரகசியங்கள் குறித்த செய்தித்தொகுப்பு தான் இது.

வேலன்டைன் டே உருவான கதை

ரோமானியர்கள் பிப்ரவரி பிற்பகுதியில் லுபர்காலியா என்ற திருவிழாவை விமரிசையாக கொண்டாடிவந்தனர். திருவிழாவிற்கு முன்பு, பெண்களின் பெயர்களை பாக்ஸில் போட்டு குலுக்கல் முறையில் இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்தத் திருவிழாவின்போது, இருவரும் காதலர்களாக வலம் வருவார்கள். சிலர் திருமணம் செய்துகொண்டு கணவர் - மனைவியான நிகழ்வுகளும் உண்டு. இதையடுத்து, தேவாலயம் அந்த திருவிழாவைக் கிறிஸ்துவ கொண்டாட்டமாக மாற்றத் திட்டமிட்டது. செயின்ட் வேலண்டைன் நினைவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலப்போக்கில், வேலண்டைன் தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.

in article image
வேலன்டைன் டே உருவான கதை

காதலர் தினத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல்!

காதலர் தினத்தில் வேதிப் பொருள்களின் அட்ராசிட்ஸூம் உள்ளது. ஒவ்வொன்றும், உணர்ச்சிகளை உடலில் அதிகமாக்கி நம்மைக் காதலில் விழ வைக்கச் செய்கிறது. இரு மனங்களின் இணைப்பு பாலமாக அவை திகழ்கின்றன. அவற்றைக் குறித்துப் பார்ப்போம்.

டோபமைன்: மூளையில் அமைந்துள்ள ஹைபோதாலமஸ் அமைப்பில் வெளியாகும் டோபமைன் என்பது ஒரு “ஃபீல் குட்” ரசாயனம் ஆகும். அவற்றின் பங்கு உறவை வலுப்படுத்துவதிலும், பாலுறவு உணர்ச்சி அதிகப்படுத்தலிலும் அதிகளவில் உள்ளது. கொகெய்ன் பயன்படுத்தப்படும்போது இதேபோன்ற செயல்பாடு ஏற்படுகிறது.

செரோடோனின்: டோபமைனின் அதிகரித்தால், செரோடோன் குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. செரோடோன் மனநிலையுடன் இணைக்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் உள்ள காதலர்களிடம், அதன் பாதிப்பைப் பார்க்க முடியும். எனவே, காதலின் ஆரம்ப கட்டத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ஆகும். துணை மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும்.

ஆக்ஸிடாஸின்: இது ஹைபோதாலமஸால் வெளியாகி, பிட்யூட்டரி சுரப்பியில் சேமித்து வைக்கப்படுகிறது. இவை பாலுறவு கொள்ளும்போதோ அல்லது தாய்ப்பால் வழங்கும் சமயத்திலோ ரத்தத்தில் கலக்கப்படுகிறது. தாய் வழிக்காதலில் அவை பிணைக்கப்பட்டுள்ளன.

வாசோபிரசின்: ஆக்ஸிடாஸின் போலவே வாசோபிரசின் ஹைபோதாலமஸால் தயாரிக்கப்பட்டு பிட்யூட்டரி சுரப்பியில் சேமிக்கப்படுகிறது. ஆண்களிடம், இந்த வேதிப்பொருள் மற்ற ஆண்கள் மீது வன்முறை ரீதியான உணர்வை ஏற்படுத்துகிறது.

மூன்றெழுத்து மந்திரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் விளையாட்டுகள்

ஈஸ்ட்ரோஜன்: இது பெண் பாலியல் ஹார்மோன் ஆகும், காதலுக்கு ஈஸ்ட்ரோஜன் அவசியம் இல்லையென்றாலும், காதலர்களுக்கு இடையில் ஏற்படும் ரொமான்ஸுக்கு ஈஸ்ட்ரோஜன் பங்கு முக்கியமாகத் தேவைப்படும். இருவருடையை ஈர்ப்பையும் அதிகரிக்க உதவுகிறது.

டெஸ்டோஸ்டிரோன்: இது ஆண் பாலியல் ஹார்மோன் ஆகும். இது ஆண்களிடம் அன்பு, ஆசை மற்றும் தந்தைவழி பராமரிப்பு போன்ற உணர்வுகளைத் தூண்டுகிறது. பாலுறவின்போது ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆண்களின் இல்லற வாழ்க்கைக்கு டெஸ்டோஸ்டிரோன் நிச்சயம் தேவைப்படுகிறது.

காதல் டே ஸ்பேஷல்

  • பிப்ரவரி 7- ரோஸ் டே
  • பிப்ரவரி 8- ப்ரொபோஸ் டே
  • பிப்ரவரி 9- சாக்லேட் டே
  • பிப்ரவரி 10- டெடி டே
  • பிப்ரவரி 11- ப்ராமிஸ் டே
  • பிப்ரவரி 12- ஹக் டே
  • பிப்ரவரி 13- கிஸ் டே
  • பிப்ரவரி 14- வேலண்டைன்ஸ் டே

பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் வேதிப்பொருள்களின் ஆட்டம், பிப்.14வரை வித்தியாசமான விதங்களில் தொடர்கிறது.

இதையும் படிங்க:'உங்க காதல் கைகூடணுமா?' அப்போ பூட்டோட புதுச்சேரிக்கு விசிட் அடிங்க... காதலர்களை கவரும் 'லவ் லாக் மரம்'!

ABOUT THE AUTHOR

...view details