பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்? - பட்ஜெட் கூட்டத்தொடர்
டிவி பேனல்கள், எலக்ட்ரிக் சமையலறை சிம்னி காயில்கள் உள்ளிட்ட சிலவற்றின் இறக்குமதி மீது சுங்க வரி குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட் 2023இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2023: எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
By
Published : Feb 1, 2023, 2:07 PM IST
|
Updated : Feb 1, 2023, 2:14 PM IST
டெல்லி:இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் 2023 - 2024ஐ பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும். அதேபோல் வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், இது பிரதமர் மோடி தலைமையிலான இறுதி முழு பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்காக காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவரை மத்திய நிதியமைச்சர் உள்பட அரசு உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர், தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார். இதில் மொபைல் சார்ஜர்கள், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், வைரங்கள் மற்றும் கேமரா லென்ஸ் ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
மேலும் Union Budget என்ற மொபைல் செயலியின் மூலம் பயனர்கள் பட்ஜெட் குறித்த முழு விவரங்களை அறியலாம். கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வ.எண்
பொருள்
தற்போதைய வரி (சதவீதத்தில்)
குறைக்கப்பட்ட வரி (சதவீதத்தில்)
1
பீக்கான் கொட்டைகள்
100
30
2
நீர்வாழ் தீவனம் தயாரிப்பதற்கான மீன் உணவு
15
5
3
நீர்வாழ் தீவனம் தயாரிப்பதற்கான கிரில் உணவு
15
5
4
நீர்வாழ் தீவனம் தயாரிப்பதற்கான மீன் கொழுப்பு எண்ணெய்
30
15
5
நீர்வாழ் தீவனம் தயாரிப்பதற்கான பாசி மாவு
30
15
6
நீர்வாழ் தீவனம் தயாரிப்பதற்கான கனிம மற்றும் வைட்டமின் கலவைகள்
15
5
7
Epichlorohydrin தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கச்சா கிளிசரின்
7.5
2.5
8
தொழில்துறை ரசாயன தயாரிப்பில் பயன்படுத்தும் நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்
5
இல்லை
9
அமில ஃபுளோர்ஸ்பார்
5
2.5
10
ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் வைரங்களுக்கான விதைகள்
5
இல்லை
11
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பேட்டரியில் பயன்படுத்தப்படும் லித்தியம் -அயர்ன் செல் தயாரிப்பதற்கான மூலதன பொருட்கள் அல்லது இயந்திரங்கள்
இதுவரை பயன்படுத்தியவை
31.03.2024 வரை பொருந்தும்
12
ஃபெரைட் பவுடர் தயாரிப்பதற்கான ரசாயங்கள்
7.5
இல்லை (31.03.2024 வரை பொருந்தும்)
13
கனெக்டர்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் Palladium Tetra Amine Sulphate
7.5
இல்லை (31.03.2024 வரை பொருந்தும்)
14
மொபைல் போன்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் மற்றும் அதன் உள்ளீடுகள்
2.5
இல்லை
15
டிவி பேனல்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஓப்பன் செல்கள்
5
2.5
16
எலக்ட்ரிக் சமையலறை சிம்னி காயில் தயாரிப்பு
20
15
17
பயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக விளையாட்டு வீரர்களால் இறக்குமதி செய்யப்படும் வார்ம் பிளட் குதிரை வகைகள் (Warm blood horse)
30
இல்லை
18
சோதனை முகவர்களால் சோதனை அல்லது சான்றிதழுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், பல்வேறு வகையிலான ஆட்டோ மொபைல் பொருட்கள்