டெல்லி:உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தம்பதிகள் வழக்கமான செக்ஸ் வாழ்க்கையை விட வித்தியாசமான, புது அனுபவத்தை வழங்க கூடிய முறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அவர்களது செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த இது குறித்த புத்தகங்களையும் பல படித்து தெரிந்து கொள்கின்றனர். இந்த வரிசையில் தம்பதிகளுக்கிடையேயான உறவை மேலும் இன்பமாக்குவதற்கான தாந்தீரிக செக்ஸ் முறையான ‘கரீசா’ டெக்னிக்ஸ் குறித்து கேள்விபட்டது உண்டோ? இது முன்விளையாட்டு போல வேடிக்கையானதாகவும், விரைவாக விந்து உமிழ்தலை கட்டுபடுத்தவும் உதவுகிறது.
‘கரீசா’என்றால் என்ன?:கரீசா என்பது ஒரு வகையான மென்மையான பாலியல் செயல்பாடு ஆகும். இத்தாலிய வார்த்தையான "கரேஸ்ஸா", அதாவது அரவணைப்பு என்பதிலிருந்து இந்த பெயர் உருவானது. மற்ற வகையான பாலியல் செயல்பாடுகளைப் போல் இல்லாமல், கரீசாவின் நோக்கம் உச்சத்தை அடைவது இல்லை. இம்முறை மூலம் உங்கள் துணையுடன் தளர்வு மற்றும் ஒரு வகையான பிணைப்பை உருவாக்குவது ஆகும்.
கரீசா டெக்னிக்கானது துணையின் உடல் மீதான ஆசையை விட, அவர் மீதான ஆன்மீக அன்பில் அதிக கவனம் செலுத்த வைக்கிது. வழக்கமான முன்விளையாட்டுக்குப் பதிலாக, கரீசாவின் டெக்னிக்கை பின்பற்றலாம். இதில் புன்னகை செய்வது மற்றும் தோலுடன் தோல் தொடர்பு கொள்வது போன்ற சிற்றின்ப பிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். பொதுவாக முதன் முதலில் செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இதில் வழக்கமான உடலுறவில் ஈடுபடுவர்களை விட மெதுவாகவும், பதட்டமானதாகவும் செயல்பாடுகள் இருக்கும். மிகவும் திருப்திகரமான செக்ஸ் அனுபவத்தை உங்கள் துணையுடன் பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா? கரீசா டெக்னிக்கை அதிகம் பயன்படுத்துவதற்கான சில குறிப்புகள் இங்கே:
1.உங்கள் துணையை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்:கரீசா முறை ஒரு இரவு மட்டும் நீங்கள் வைத்திருக்கும் உறவுக்கானது அல்ல. நீண்ட காலமாக உறவில் இருக்கும் நீங்கள் நம்பக்கூடிய ஒருவருடன் நீங்கள் செக்ஸ் மேற்கொள்ளும் போது இது சிறப்பாகச் செயல்படும். அவ்வாறான உறவில் இருவரும் உடலுறவில் ஈடுபடும் போது, கரீசாவின் முழு நிகழ்வும் ஒரு சிகிச்சையாக மாறுகிறது. நம்பகமான துணையுடன் இம்முறை சிறப்பான அனுபவத்தை தரக்கூடியதாகும்.
2. செக்ஸ் மீதான நோக்கங்களை தெளிவுபடுத்த வேண்டும்: உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருந்தால் அதை முயற்சி செய்ய வேண்டும் என கரீசா டெக்னிக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் இணை "ஏன்" இது போன்ற நோக்கங்கள் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் நீங்கள் அதை உண்மையாக வெளிப்படுத்தலாம் (அதாவது, அவர்கள் விரும்பும் பாசத்தை அவர்களுக்கு வழங்குங்கள்).