டெல்லி:பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த நாட்டில் சொந்த மண்ணில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாத சூழல் உருவாகியிருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக இச்சம்பவம் குறித்து விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "இந்தச் செய்தி என் மனதை உலுக்குகிறது. அரசு இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். உள்துறை அமைச்சகம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சொந்த நாட்டில், சொந்த மண்ணின் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை," என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் தலைமை ட்விட்டர் பக்கத்தில், ''இது நரேந்திர மோடி அரசின் தோல்வி. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது'' என்று தெரிவித்துள்ளது.
நாகாலாந்து மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்ப காத்துக் கொண்டிருந்த நிலையில், காணாமல் போயினர்.