தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி ஒன்று சொல்கிறார், உள்துறை அமைச்சகம் ஒன்று சொல்கிறது ; ராகுல் தாக்கு - தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனை

டெல்லி : ”நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அளிப்பது குறித்து ஒருபோதும் தெரிவிக்கவில்லை” என்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Dec 3, 2020, 4:16 PM IST

கரோனா தடுப்பூசி இறுதிகட்டப் பரிசோதனையில் தற்போதுஉள்ளது. இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சமீபத்தில் நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது, பிகார் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், தற்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், ”நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. வைரஸ் பரவும் சங்கிலியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டால் போதுமானது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இதுபோன்ற அறிவியல் ரீதியான பிரச்னைகளை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே விவாதித்து அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்." என்றார்.

இந்நிலையில், மத்திய அரசின் தடுப்பூசி குறித்த நிலைபாட்டை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடி, பிகார் தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் பிகாரில் உள்ள அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார். ஆனால், தற்போது அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று ஒருபோதும் சொல்லவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைபாடுதான் என்ன?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று கூறியதற்காக மத்திய அரசை 'யு-டர்ன் சர்க்கார்' என்று காங்கிரஸ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புரெவி புயல்: தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு

ABOUT THE AUTHOR

...view details