டிடினிடாட் :இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது.
பார்படோஸ் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே மைதானத்தில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹோப், பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியில் இருந்து மீண்டும் வந்து இந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அணியுடன் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியின் காரணமாக இந்திய அணியில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழையின் தாக்கம் காரணமாக 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு சறுக்கலாக அமைந்தது. அதேநேரம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவும், டெஸ்ட் போட்டிகளில் கண்ட தோல்விக்கு இந்தியாவை பழிதீர்க்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க :விமானத்தில் தூங்கியபடி வரும் டோனி! க்யூட் ரசிகையின் வீடியோ வைரல்!