மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே, ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல்.22) காலை 7 மணியளவில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கான தேர்தலில் 306 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதற்காக, 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.