தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா பரவலுக்கு மோடியும், தேர்தல் ஆணையமும் தான் காரணம்' - mamata banerjee

கொல்கத்தா: கரோனா பரவல் அதிகரிப்புக்கு பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும் தான் முக்கிய காரணம் என மேற்குவங்க தேர்தலின் இறுதிக்கட்ட பரப்புரையில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

West Bengal
மம்தா பானர்ஜி

By

Published : Apr 27, 2021, 12:06 PM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே 7 கட்டங்களுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது.

பரப்புரையின் போது பேசிய மம்தா பானர்ஜி, "இதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நாங்கள் தேர்தல் ஆணையத்தை மதிக்கிறோம். ஆனால், நீங்கள் பிரதமர் மோடியின் கிளி, மைனா, கண்ணாடி ஆக மாறிவிட்டீர்கள். கரோனா பரவல் அதிகரிப்புக்குப் பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும் தான் காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். தன்னுடைய பொறுப்புகளிலிருந்து தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது.

கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்கியுள்ள 2 லட்சம் மத்திய படை வீரர்களை திரும்பப்பெறுங்கள். இதில் 75 விழுக்காடு பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் வழங்குங்கள். கடைசிக் கட்டத் தேர்தலில் மத்தியப் படைகளை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சோட்டா ராஜனுக்கு கோவிட்-19: டெல்லி எய்ம்ஸில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details