புது டெல்லி:உச்சநீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் சூர்யாகாந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு கொல்கத்தா உயர்நீதிமன்ற சிறப்பு விடுப்புக்கு அனுமதி அளித்தது. சிறப்பு விடுப்பு மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் ஆணையத்தை சேர்ந்த மீனாட்சி அரோரா மனுத் தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுப்படி, மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலுக்கு மத்திய பாதுகாப்பு படைகளை 48 மணி நேரத்துக்குள் அனுப்புமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஜூன் 13ஆம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொள்ளாததாலும், மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்பாததாலும் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் ஜூன் 13அம் தேதி மற்றும் ஜூன் 15ஆம் தேதி அளித்த 2 உத்தரவுகளுக்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக ஜூன் 13ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்புமாறு உத்தரவிட்டது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி அளித்த உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் பிஜேபியை சேர்ந்த சுவேண்டு அதிகாரி என்பவர் பஞ்சாயத்து தேர்தல் அமைதியாக நடக்க மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டும் என மனுத் தாக்கல் செய்தனர்.