தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க அமைச்சருக்கு கரோனா பாதிப்பு!

மேற்கு வங்க மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

Aroop Biswas
Aroop Biswas

By

Published : Jan 2, 2022, 11:51 AM IST

கொல்கத்தா : கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரூப் பிஸ்வாஸ் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு மருத்துவர் சரோஸ் மண்டல், மருத்துவர் சப்தர்ஸி பாசு ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்துவருகின்றனர்.

அண்மையில் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக மூன்றாம் அலை பரவக் கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில் நாட்டில் பல்வேறு இடங்களிலும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details