மேற்குவங்க மாநிலத்தில் அரசு செயல்படுத்தும் திட்டங்களில், கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய குறுகிய காலப் பயிற்சிகளை (Paid internships) வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மாநில அரசு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த குறுகிய காலப்பயிற்சியால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்தவிதப் பயனும் இல்லை என்றும், இந்தப் பயிற்சிகளை தந்து நிரந்தர வேலைவாய்ப்புகளை அரசு மறுக்கிறதா? என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.