டார்லிஜிங்: மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் பாலிவுட் நடிகர், மாடல், ஃபிட்னெஸ் விளம்பரதாரரான மிலிந்த் சோமன் இன்று ஆளுநர் ஜகதீப் தன்கரை சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆளுநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், சிறந்த உடற்பயிற்சி ஊக்குவிப்பாளர், சூப்பர் மாடல் மற்றும் நடிகர், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் உந்துதலையும் உத்வேகத்தையும் அளித்துவரும் மிலிந்த் சோமனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.