தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி - மேற்கு வங்க அரசு அதிரடி திட்டம்! - மாம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் சாதம், பருப்பு, காய்கறிகளுடன் சேர்த்து கூடுதலாக கோழிக் கறி மற்றும் பருவகால பழங்கள் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்

By

Published : Jan 6, 2023, 11:08 PM IST

கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவில் கோழிக் கறி மற்றும் பழங்கள் வழங்க மம்தா பானர்ஜி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 1 கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதிய உணவில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சாதம், பருப்பு, காய்கறிகள், சோயாபீன் மற்றும் முட்டை உள்ளிட்டவற்றுடன் கூடுதலாக கோழிக் கறி மற்றும் பருவகால பழங்களை வழங்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "மத்திய அரசின் மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச் சத்துக்காக கோழிக் கறி மற்றும் பருவகால பழங்கள் வாரத்திற்கு ஒரு முறை என ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநில அரசு கூடுதலாக 371 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், 4 மாதத்துக்குப் பின் திட்டம் தொடருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசியல் களமாடி வருவதாக பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:விபத்தை தவிர்க்கும் விஷேச ஹெல்மெட் - பள்ளி மாணவி கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details