கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்த இஸ்லாமிய வாக்குகள் குறித்த கருத்துகளுக்காக, நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பரப்புரை செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் முன்னதாக உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தர்ணா போராட்டத்தில் மம்தா - இஸ்லாமிய வாக்குகள் குறித்த கருத்து
பரப்புரையில் ஈடுபட தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
West Bengal CM Mamata sits on dharna to protest EC's decision
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தாவிலுள்ள காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தர்ணா போராட்டத்தில் மம்தா ஈடுபடுவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு ஆதரவளித்து ட்வீட் செய்திருந்தார்.