தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Mamata Banerjee : நூலிழையில் உயிர் தப்பிய மம்தா பானர்ஜி.. என்ன ஆச்சு தெரியுமா? - மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்

கிராமப்புற தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jun 27, 2023, 3:08 PM IST

ஜல்பைகுரி : மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி 75 ஆயிரம் இடங்களுக்கான கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதியில் வன்முறைகள் வெடித்துன. மாநிலத்தை அளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுபுறம் இருக்க கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து காணப்படுகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மம்தா பானார்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜல்பைகுரி மாவட்டம் சேவோக்கில் இருந்து பக்தோக்ராவுக்கு மம்தா பானார்ஜி பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோசமான வானிலை காரணமாக ஹெலிகாபட்ரின் மூன்று பக்கங்களையும் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், மழை தீவிரமாக பெய்யத் தொடங்கிய நிலையில், ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டார்ஜலிங் மலைபிரதேச பகுதியில் மட்டும் தெளிவான வானிலை காணப்பட்ட நிலையில், அந்த பக்கமாக நோக்கி ஹெலிகாப்டரை விமானி அவசரமாக செலுத்தினார்.

சேவோக் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விமானியின் துரிதமான அதிதிறமையான நடவடிக்கையால் மோசமான வானிலை மற்றும் விபத்தில் இருந்து நூலிழையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். இதற்கிடையில், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த திங்கிட்கிழமை கூச்பேஹாரில் இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதையும் படிங்க :மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை.. கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details