கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் பெயர் அடிபடுகிறது. இது தொடர்பாக சிபிஐ (மத்திய புலனாய்வு குழு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 28) ஆளுங்கட்சியான திரிணாமுல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர், “மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தாலிபான்களுடன் ஒப்பிட்ட பாஜக.. அடித்து நொறுக்கிய மம்தா.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!! மாநிலத்தின் மிக மிக மோசமான முதலமைச்சர் மம்தா பானர்ஜி என குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஃபர்ஹாத் ஹக்கிம், “பாஜகவினர் திட்டமிட்டு நாடகம் ஒன்றை நடத்துகின்றனர்.
சட்டப்பேரவைக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” எனச் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி, திரிணாமுல் காங்கிரஸை தாலிபான்களுடன் ஒப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர், “மேற்கு வங்க சட்டப்பேரவையில் வன்முறையால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் நீதி கேட்டனர்.
மம்தா பானர்ஜி மக்களிடம் எதை மறைக்க போராடுகிறார். திரிணாமுல் காங்கிரஸில் (TMC) T என்றால் தாலிபானா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மார்ச் 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
இந்தப் படுகொலையை ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் செய்ததாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில் பாகுபாடற்ற விசாரணை தேவை என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 'மம்தா மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராகும்' - சுவேந்து அதிகாரி