தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்காளத்தில் இறுதிச் சடங்கு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம் - 18 பேர் உயிரிழப்பு! - மேற்கு வங்காளத்தில் வேன் லாரி மோதி விபத்து

மேற்கு வங்காளத்தின் நபதீப் என்ற இடத்திற்கு இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய சென்றபோது வேன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேற்கு வங்காளத்தில் கோர விபத்து
மேற்கு வங்காளத்தில் கோர விபத்து

By

Published : Nov 28, 2021, 3:11 PM IST

நாடியா:மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திலுள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருந்து நபதீப் என்ற இடத்திற்கு, இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு (நவ.27) வேனில் சென்றுள்ளனர்.

அப்போது, ஹன்ஸ்காலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புல்பாரி பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கற்கள் ஏற்றிவந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.

இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சக்திநகர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வேன் அதி வேகமாக வந்த காரணத்தால் விபத்து நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: Chengalpattu Flood: மழை நீரில் தத்தளிக்கும் கலால் காவல் நிலையம்

ABOUT THE AUTHOR

...view details