தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY RASIPALAN: வெற்றியை உரித்தாக்கும் ராசிகள்; எந்தெந்த ராசிகள் தெரியுமா? - WEEKLY RASIPALAN

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரையில் 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

WEEKLY RASIPALAN
WEEKLY RASIPALAN

By

Published : Jul 30, 2023, 8:00 AM IST

மேஷம்: அனுகூலமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல்கள் ஏற்படலாம். இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேறொருவர் மூலம் காதல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படலாம். நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதால் காதலில் சிக்கல்கள் உருவாக்கக்கூடும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்கள். ஒரு மதம் சம்பந்தப்பட்ட பயணத்திற்கும் செல்லலாம் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பையும் பெறலாம். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி பலமாக இருக்கும். வேலையில் நிபுணராக மாறலாம். அதன் காரணமாக நன்மையைப் பெறுவீர்கள். தொழில்புரிபவர்களின் கடின உழைப்பு வெற்றியடையும். ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ரிஷபம்: முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். திருமணமானவர்கள் நல்ல மனநிலையில் காணப்படுவார்கள். நடைப்பயிற்சிக்காக எங்காவது செல்லலாம். உங்கள் காதலி உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலையில் ஆர்வம் ஏற்படலாம். இருப்பினும், சிலர் எதிராக நிற்பதாகத் தோன்றலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். இருப்பினும் திறன் இருப்பதால் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்புரிபவர்கள் மிகவும் கவனமாக செய்ய வேண்டியிருக்கும். கம்ப்யூட்டரால் ஒருவித சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது. நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். அவர்கள் தொழிலுக்கு உதவலாம். மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள்.

மிதுனம்:ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் திருப்தி ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து புதிய வேலைகளைத் துவங்க முயற்சி செய்வீர்கள். இது பொருளாதார பலன் தரும். காதலிப்பவர்களுக்கு ஒரு நல்ல நேரம். உங்கள் தரப்பிலிருந்து ஏதாவது முயற்சி செய்து அவர்களின் இதயத்தில் இடம்பிடித்திடுங்கள். நீங்கள் மனதில் எதையோ நினைத்து கவலைப்படலாம். சில தவறான எண்ணங்களும் மனதில் வரக்கூடும். ஆனால், அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் அவை ஆரோக்கியத்தைக் கெடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைக்காக கடினமாக உழைப்பீர்கள். தொழில்புரிபவர்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் வணிகம் வளரும். மாணவர்கள் இப்போது கடினமாக உழைக்க வேண்டும்.

கடகம்:வாரத்தின் தொடக்கம் சற்று பலவீனமாக இருக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் சில பதற்றத்தை உணரலாம். இதற்கு உங்கள் நடத்தையை சரிசெய்து கொள்ளவேண்டும். உயர்ந்தவராக என்னுவதை தவிர்க்கவும். காதலிப்பவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கிறது. உறவில் அன்பு அதிகரிக்கும். இது உறவை மேலும் வலுப்படுத்தும். செலவுகள் அதிகம் ஏற்படலாம். மன அழுத்தமும் பாதிக்கும். அதிலிருந்து வெளியேற முடியாது என்று உணரலாம். ஆனால், அது அப்படி நடக்காது. இது மாயை மட்டுமே. பொறுமையாக இருந்து வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நல்லது. கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியின் புதிய அத்தியாயத்தை பெற்றுத்தரும். தொழில்புரிபவர்களுக்கு இந்த முறை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். கைகளுக்கு பல வேலைகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்.

சிம்மம்:சாதகமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு பதற்றம் இருந்தாலும், உறவில் நிறைய காதல் தருணங்கள் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். ஒன்றாக நடைப்பயிற்சி செல்லலாம். காதலிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. உங்களின் காதல் மூலம் காதலியின் இதயத்தை வெல்ல முடியும். எனவே, ஒவ்வொரு நாளையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். யோகா செய்வதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில்முறை வாழ்க்கையும் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் இருக்கலாம். இது முன்னோக்கி அழைத்துச் செல்லக்கூடும். உழைப்பு பாராட்டப்படும் பட்சத்தில், வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். வேலை விஷயத்திலும் லாபம் அதிகரிப்பதைக் காணலாம். மாணவர்கள் படிப்பை மேலும் மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி:சுமாரான லாபகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். இந்த நேரம் காதலிப்பவர்கள் சற்று பலவீனமாக இருக்கலாம். உங்களுக்குள் ஏற்படும் விவாதத்தை பெரிதாக்கவேண்டாம். ஏனெனில், உங்கள் இருவருக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும். வேலையில் வெற்றியைப் பெற வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். வியாபாரம் நிறைய பெருகும். தொலைதூர பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பெறலாம். செலவுகளும் மிக வேகமாக அதிகரிக்கும். இது சில நேரங்களில் தொந்தரவினை ஏற்படுத்தும். வருமானமும் வேகமாக பெருகும். அது மகிழ்ச்சிக்கு காரணமாக மாறக்கூடும்.

துலாம்:திருமணமானவர்களுக்கு வாழ்க்கையும் நன்றாகவே அமையும். வாழ்க்கைத் துணையுடன் ஷாப்பிங் செய்யத் திட்டமிடுவீர்கள். காதலிப்பவர்களுக்கு பொழுதுபோக்கு வாரமாக இருக்கலாம். மேலும் காதலிப்பவருடன் நடைபயிற்சி செல்லலாம். முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பும் கிடைக்கலாம். கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேறும். பொருளாதார ரீதியாகவும் சில சாதனைகளைப் பெறுவீர்கள். அரசுத் துறையிலிருந்து பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் கவனத்தை ஈர்க்கும். உத்தியோகத்தில் வலுவாகி வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். தொழில்புரிபவர்களுடன் இணைந்து முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். எந்த ஒரு சாதனையையும் சாதிக்கலாம்.

விருச்சிகம்:மிகவும் சாதகமானதாக தோன்றலாம். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவில் அன்பும், ரொமான்ஸும் அதிகரிக்கும். சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். ஆனால், அவை அன்பு நிறைந்ததாக இருக்கலாம். எனவே, பதற்றமடையத் தேவையில்லை. உங்கள் துணையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவர்களின் நடத்தைக்கு ஏற்ப நடந்து கொண்டால் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரக்கூடும். காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், நெருக்கமான ஒருவர் எதிரியாக மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேச்சு இனிமையாக இருக்கலாம். இதன் காரணமாக மற்றவர்கள் ஈர்க்கப்படலாம். வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அதனால் வேலையில் வெற்றியும் பெறுவீர்கள். மேலும், மன உறுதி வலுவாக இருக்கும். பணியிடத்தில் நிலைமை மேம்படும்.

தனுசு:திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் தொலைதூரத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இது உறவில் மாற்றத்தைக் கொண்டுவரும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வலுப்படுத்தும். காதலிப்பவர்களுக்கு இந்த நேரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக உள்ளது. காதலிப்பவரை உங்கள் வாழ்க்கைத்துணையாக மாற்றுவது உங்களுக்கு எளிதானதல்ல. இதற்காக நிறைய முயற்சி செய்ய வேண்டும். எந்த முடிவையும் இப்போது மிக வேகமாக எடுக்க வேண்டாம். அது சிக்கலில் ஆழ்த்தக்கூடும். குறிப்பாக, அரசு தொடர்பான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அரசு டெண்டரை எடுக்கப் போகிறீர்கள் என்றாலும் சரி எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பிரச்னைகள் எழலாம். ஆனால் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எங்காவது இடமாற்றம் செய்யப்படலாம் அல்லது பணிபுரியும் துறையும் மாற்றப்படலாம்.

மகரம்:ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். தாம்பத்திய வாழ்க்கை மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். காதலிப்பவர்களுக்கு சாதகமாகத் தெரிகிறது. உங்களுக்குள் நெருக்கம் ஏற்படலாம் மற்றும் மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் பேச வேண்டும். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். உங்களின் கடின உழைப்பினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில்புரிபவர்களுக்கு அரசுத் துறையினரால் பெரிய ஆதாயம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக, நேரம் சற்று பலவீனமாகத் தெரிகிறது. அதிகப்படியான செலவுகள் ஏற்படலாம். இப்போது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களைப் பொறுத்தவரை கவனச்சிதறல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் ஒரு அட்டவணையை உருவாக்கி தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஓரளவு தொந்தரவு செய்யலாம்.

கும்பம்:இந்த வாரம் சிறப்பாக அமையப்போகிறது. திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை சீராக இருக்கும். லேசான சில்மிஷம் ஏற்படலாம். ஆனால் உறவில் அன்பு இருக்கக்கூடும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற வாரமிது. காதலிப்பவருடன் திருமணத்திற்கான பேச்சுகளும் வரலாம். திட்டங்கள் வெற்றியடையலாம். வருமானம் அதிகரிப்பதால் மனதில் மகிழ்ச்சியின் உணர்வைக் காணமுடியும். இந்த வாரம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. வேலை நன்றாக இருக்கும் இதன் காரணமாக வெற்றியைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். அங்கும் இங்கும் அதிகம் பேசாமல் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். செலவுகள் சற்று ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படலாம். அரசுப் பணிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மீனம்:பொதுவாக இந்த வாரம் லாபகரமாக இருக்கும். மாமியாருடன் நல்லுறவு ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் நல்லிணக்கத்தைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் பொறுமையுடனும், அமைதியுடனும் செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அப்போது தான் அவர்கள் பயனடைவார்கள். தொழில்புரிபவர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருந்து தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். வார முற்பகுதியில் செலவுகளில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்கள், தேவையற்ற கவலைகளால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details