மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாகவே இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் இனிமையைச் சேர்க்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் வேலையில் லாபம் கிடைத்து முன்னேற்றம் உண்டாகும். காதலிப்பவர்கள் புரிதலுடன் இருப்பதால் வாழ்க்கை இனிமையாக மாறும். வாரத் தொடக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருக்க வேண்டும்.
வருமானத்தையும் செலவுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது செலவுகள் அதிகமாக இருப்பதால், நிதி நிலைமை மோசமடையக்கூடும், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கச்செய்யும். இருப்பினும், உங்கள் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து ஏதாவது ஒரு வழியில் பணவரவை அதிகரிக்க முயற்சி செய்யலாம். உடன்பிறந்தவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள், ஆனால் அவர்கள் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும்.
ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் ஏதாவது விஷேசம் வைக்கலாம். வீட்டிலேயே அதற்கான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருமணமானவர்கள் இந்த வாரம் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்யோன்யம் மிகவும் சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டு தங்கள் காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
அவர்கள் சிறு உல்லாசப் பயணங்களும் மேற்கொள்ளலாம். எதிர்பாரத நேரம் எங்கிருந்தோ திடீர் பணவரவு ஏற்படும், இது உங்கள் நிதி சவால்களைக் குறைக்க உதவும். வேலைசெய்பவர்கள் தங்களின் இந்த வாரத்தை கடின உழைப்பிற்கு செலவிடுவார்கள். உங்கள் வேலையைச் சரியான நேரத்தில் முடிக்க நீங்கள் நிறையவே முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும், நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் செலவுகள் அபரிமிதமாக உயரும். வேலை நிமித்தமாகவும் சிறிது செலவு செய்வீர்கள்.
மிதுனம்:இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தங்கள் இல்லற வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக ஷாப்பிங் செய்யலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. இந்த வாரம் உங்கள் உறவில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களுடன் சுற்றுலாப்பயணம் செய்து ஜாலியாக இந்த வாரத்தைத் தொடங்குவீர்கள்.
உங்கள் வேலையில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள், மேலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீங்களும் நல்ல நண்பராக செயல்படுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைவீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் வலுவாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கிறது, எனவே உங்கள் தரப்பில் எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய ஆட்களின் ஆதரவு கிடைக்கும், இதன் காரணமாக உங்கள் வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம்.
கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் தங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடைவதால் அவர்கள் சற்று கவலைப்படலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. இந்த வாரம் உங்கள் உறவில் அன்பும் ஈர்ப்பும் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும்.
சில முரண்பட்ட விஷயங்களால் உங்கள் வேலையை இழக்கப் போவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது தற்காலிகமானது என்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வேலையில் உறுதியாக இருக்கிறீர்கள், நீங்கள் வெற்றியடைவதை எதுவும் தடுக்காது. வேலை நன்றாக நடக்கும், வரும் காலத்தில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, சில புதிய திட்டங்களை மேற்கொள்வீர்கள், இதன் காரணமாக வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
சிம்மம்: இந்த வாரத் தொடக்கத்திலேயே கொஞ்சம் பலவீனமாக உணர்வீர்கள், ஆனால் படிப்படியாக நிலைமை உங்களுக்குச் சாதகமாக மாறத் தொடங்கும். நீண்ட தூரப் பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். மன உளைச்சல் ஓரளவிற்கு குறையும். மனதிற்குள் மகிழ்ச்சியாகவும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க விரும்புபவராகவும் இருப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் வாரமிது.
நீங்கள் காதலிப்பவருடன் உங்கள் காதலைக் குறித்து பேசுவீர்கள், இதன் காரணமாக உங்கள் உறவு மிகவும் முதிர்ச்சியடையக்கூடும். நீங்கள் திருமணத்தைப் பற்றி பேசினாலும், நீங்கள் காதலிப்பவரால் மறுக்க முடியாது. எனவே, நீங்கள் காதலிப்பவரை திருமணத்திற்கு சம்மதிக்கவைக்க பொருத்தமான நேரமிது. உங்கள் உறவில் அன்பும், ஈர்ப்பும், சில பரஸ்பர பிரச்சினைகளும் எழக்கூடும், அவை கவனிக்கப்பட வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும்.
கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சில வித்தியாசமான பலன்களை தரக்கூடிய வாரமாகும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நெருக்கமான உறவுகளுடன் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது வலுவான ஈர்ப்பைக் கொண்டிருக்கலாம், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கலாம். இருப்பினும், இதன் காரணமாக, நீங்கள் சிறிது காலம் உங்கள் வாழ்க்கைத் துணையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வெளிநபருடன் காதல் வயப்படுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் இல்லற வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும்.
காதலிப்பவர்களுக்கு நேரம் மிதமானதாகத் தெரிகிறது. உங்கள் காதலியின் அதிருப்தியை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை செய்பவர்கள் வேலை சம்பந்தமாக கடினமாக உழைக்கவேண்டி இருக்கும், ஆனால் உங்கள் வருமானம் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு தங்கள் பணியில் கொஞ்சம் கவலை ஏற்படலாம். அதன் விளைவு உங்கள் ஆரோக்கியத்திலும் காணப்படலாம். அதனால் இப்போது உங்கள் தரப்பிலிருந்து பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.