மேஷம்
வாரத் தொடக்கம் உங்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும், செலவைக் கட்டுப்படுத்துவதென்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். தேவையற்ற செலவுகள் உங்களைச் சிக்கலில் ஆழ்த்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்தையும் கூட கெடுத்துவிடும். வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதீத காய்ச்சல் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.
உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக அன்பு இருக்கலாம், நீங்கள் காதலிப்பவர் உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யலாம். இது உங்களுக்கும் நீங்கள் காதலிப்பவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கலாம், ஆனால் அது ஒரு தவறான புரிதலாக மட்டுமே இருக்கும், எனவே நீங்கள் காலப்போக்கில் அதைத் தீர்ப்பீர்கள். வேலையில் உங்களுக்கு சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், தேவையில்லாததைப் பேசி உங்கள் மற்றும் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
ரிஷபம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும் வாரமாகும், உங்கள் கவலைகளை அகற்றும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மீண்டும் மேம்படும், உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களிடம் ஒரு நன்றி உணர்வைக் காட்டுவார். உங்கள் பெரும்பாலான நேரம் உங்கள் காதலியின் அழகைப் புகழ்வதிலேயே செலவிடப்படும்.
காதலர்களுக்கு நல்ல நேரமிது. வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும், அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவதில் வெற்றி பெறலாம். நீங்கள் அரசாங்கப் பணிக்காக ஒப்பந்தம் செய்திருந்தால், அது வெற்றிகரமாக நடக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்துச் செய்வார்கள், ஆனால் உங்கள் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பராமரிக்க வேண்டும்.
மிதுனம்
இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒருவருடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், இந்த வாரம் அதற்கு ஏற்ற வாரமாகும். வேலை செய்பவர்கள் தங்கள் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். காதலர்களுக்கு நல்ல நேரமிது. அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள்.
திருமணமான தம்பதிகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்கள் திருமண வாழ்க்கையில் சில புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத்துணை பொறுமையற்று இருக்கலாம் மற்றும் அவரது / அவளது வார்த்தைகளில் கோபம் வெளிப்படலாம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஒவ்வொரு சவாலையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் எதிரிகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
கடகம்
இந்த வாரம் உங்களின் நிதி நிலைமை வழுவடைய வாய்ப்புள்ளது. உங்கள் பணிச்சுமையும் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். புதிய நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம், இது உங்களின் சமூக வட்டத்தை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. உங்கள் தந்தை, மேலதிகாரிகள் அல்லது அதிகாரிகளுடன் பேசும்போது மரியாதையுடன் பேசுங்கள். வாரக் கடைசியில் நீங்கள் ஆன்மீகப் பணிகளில் நேரத்தைச் செலவிடலாம்.
மாணவர்கள் வாரக் கடைசியில் கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். வார நடுப்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில், மன அழுத்தமும் சில நேரங்களில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம். உங்கள் அன்றாட வேலைகளிலும் நீங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். உங்கள் பணிச்சுமை காரணமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வு ஏற்படுவதால், வார இறுதியில் பணிச்சுமையைக் குறைக்க முயற்சிக்கவும்.
சிம்மம்
இந்த வாரம் உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம், இது உங்கள் தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்தும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக உங்கள் செலவுகள் குறையும், இது உங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு, இது கவனமாக வேலை செய்ய வேண்டிய நேரம். யாராவது உங்களுக்கு எதிராக சதி செய்யலாம், அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள ஒருவரின், குறிப்பாக உங்கள் தாயின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால், உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும், வேலையில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். பயணத்திற்கு இந்த வாரம் சரியானதல்ல.
கன்னி
இந்த வாரம் உங்களுக்கு வேலை அதிகமுள்ள வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், உங்கள் வியாபாரத்தில் வெற்றி ஏற்படலாம். நீங்கள் சில புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம், இது வியாபாரத்தில் உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து செய்வார்கள், மேலும் அவர்கள் முன்னேறிச் சென்று புதிய வேலைகளையும் தேடிக் கொள்ளலாம் மற்றும் தங்கள் உயர் அதிகாரிகளை நல்ல செயல்திறனுடன் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ விரும்பலாம். உங்கள் உறவுகள் சரியாகிவிடும். திருமணமானவர்களுக்கு நல்ல நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். வாரத் தொடக் நாட்களும் வாரக் கடைசி நாட்களும் பயணத்திற்கு ஏற்றது.