தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Weekly horoscope: வியாபாரத்தில் லாபம் கிடைக்க உள்ள ராசிகள்! - கும்பம்

ஜூலை 2 முதல் ஜூலை 8 வரையில் 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 2, 2023, 7:03 AM IST

மேஷம்: திருமணமான தம்பதிகளுக்கு ஏற்ற வாரம் இது. ஏனெனில், இந்த வாரம் உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்க்கப்படும். உணர்ச்சிவசப்படுபவர்கள் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுடனான ஒற்றுமை குறையலாம். அதாவது, சண்டைச் சச்சரவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது நல்லது. வேலை அதிகரிக்கும். அதேநேரம், நீங்கள் அதை செய்து முடிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பும் மற்றவர்களிடம் அதிகரிக்கும்.

உங்கள் செயல்திறனைக் காட்ட வேண்டும். அப்போதுதான் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். வேலைகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள் என்று உங்களை நம்பி முதலாளிகள் மகிழ்ச்சியடைவார்கள். தொழிலை மேம்படுத்த சில பெண்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் அன்பும், பாசமும் நிறைந்திருக்கும். நல்ல விஷயங்களுக்கான ஏற்பாடுகளும் நடக்கும். தொழில்நுட்ப மாணவர்கள் கற்றலில் நேரத்தை செலவிட்டு சிரத்தையெடுத்து படிப்பார்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள்.

ரிஷபம்: இந்த வாரம் மிகவும் சிறப்பான வாரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அதே நேரத்தில் காதலிப்பவர்கள் தங்கள் காதலின் மீது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கலாம். காதலிப்பவரை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்துவீர்கள். வேலையில் வெற்றி பெறுவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நிலச் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வேலை செய்பவர்கள் கடின உழைப்புடனும், புத்திசாலித்தனமாகவும் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த நேரத்தில் நீங்கள் யாருடனாவது சண்டையிடலாம் அல்லது யாராவது உங்களுக்கு எதிராக தந்திரம் செய்யலாம், எனவே, இது குறித்து கவனமாக இருப்பது நல்லது. வேலையை மிகவும் கவனமாக செய்யுங்கள். வேலையில் உங்கள் செயல்திறனை மேம்படுத்த முயற்சியுங்கள்.

மிதுனம்: இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். மனதில் இருக்கும் பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். சண்டை சச்சரவுகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்களை நீங்களே ரசிப்பீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்னைகள் தீர்க்கப்படலாம். ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவது உறவை வலுப்பெற வைக்கும். மேலும் அவர்களுக்கென நேரம் ஒதுக்கி காத ல்புரிவதன் மூலம் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலைக் காதலிப்பவரிடம் சொல்ல நல்ல நேரமிது.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அதீத நம்பிக்கையை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவொரு அரசுத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள பொன்னான வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதை விட்டுவிடாதீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கடகம்: இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மிகவும் திருப்தியடைவார்கள். காதலும், அன்யோன்யமும் உங்கள் உறவின் எல்லாமாக இருக்கலாம். உறவு வலுவாக இருக்க அது தேவை. இதன் மூலம் இந்த தருணத்தையும், இந்த வாரத்தையும் முழுமையாக அனுபவிக்கலாம். ஒன்றாக சேர்ந்து வெளியே செல்ல திட்டமிடலாம். இது உங்கள் உறவை அன்பால் நிரப்பக் கூடும். காதலிப்பவர்களுக்கு வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

உங்களது படைப்பாற்றல் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்க பயன்படுத்தப்படும். மேலும் நீங்கள் இருவரும் உங்கள் இதயத்தைப் புரிந்து கொள்வீர்கள். இப்போது வருமானம் நன்றாக இருக்கும். இதன் காரணமாக நிதி நிலைமை வலுப்பெறும். இருப்பினும், சிறு சிறு செலவுகள் இருக்கலாம். அதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருந்தாலும், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கும். யாரிடமும் சண்டை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். மனதில் எதையும் திணிக்காமல் இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்கள் தாங்கள் காதலிப்பவரிடம் இப்போது வெளிப்படையாகப் பேசவேண்டும். உங்களுக்குள் ஈகோவைக் காட்டிக்கொண்டால் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதையெல்லாம் மீறி, உங்கள் உறவு பாதிக்கப்படாமல் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கைக்கு நல்ல நேரமிது.

ஆனால், கோபத்துடன் எந்த விஷயங்களையும் செய்யாதீர்கள். ஏனெனில் அது உறவில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் படியான பல பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் இனிமையான முடிவுகளைப் பெறுவார்கள்.

கன்னி: இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். வார முற்பகுதியில் நண்பர்களுடன் எங்காவது நடந்து செல்வீர்கள். வேடிக்கையான குணத்துடன் இருக்கலாம். இதன் காரணமாக நீங்கள் செய்ய வேண்டுமென மனதில் நினைத்த அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் செய்ய முயற்சிக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் சில புதிய சோதனைகளைச் செய்வார்கள். வாழ்க்கைத் துணைக்காக ஒரு புதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்கள் மனதில் வரலாம். காதலிப்பவர்கள் எந்த நேரமும் ரொமான்டிக்காக இருப்பார்கள்.

காதலியுடன் தொலைதூரத்தில் எங்காவது உல்லாசப் பயணம் செல்ல திட்டமிடலாம். வேலை செய்பவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபிப்பதோடு, கடின உழைப்பாலும் நேர்மையின் வழியைப் பின்பற்றுவதாலும் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள். உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். இப்போது செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும். எனவே, செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

துலாம்: இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். எனவே, கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவரைப் புண்படுத்தும் படியான எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமிது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இதன் காரணமாக பாதியில் நின்ற வேலைகளும் இழுபறியான பழைய வேலைகளும் முடிவடையும். தடைபட்டிருந்த பணமும் இந்த வாரம் வரக்கூடும்.

இதன் காரணமாக நிதி நிலைமையும் வலுப்பெறும். எல்லா நன்மைகளையும் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் உங்கள் கொடியை ஏற்றுவீர்கள். இதன் காரணமாக மன உறுதி உயரும். எதிரிகளை விட உங்களின் பலம் அதிகரிக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பை அனுபவித்து படிப்பார்கள். டெக்னிக்கல் பாடம் படிப்பவர்கள் பயனடைவார்கள்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு ஒத்துப்போகும் படியான வாரமாக இருக்கிறது. திருமணமும் உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்கள் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். சில முரண்பாடுகளும் இருக்கலாம். இருப்பினும், உங்கள் உறவில் உறுதியாக இருக்கலாம். வார முற்பகுதியில் வீட்டில் பணவரவு ஏற்படலாம். இது மகிழ்ச்சியைத் தரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

இதன் காரணமாக வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். பழைய நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பும் உண்டாகும். இதையெல்லாம் மீறி வீட்டில் உள்ள பெற்றோருக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்காக டென்ஷன் ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படும். இதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். தாம்பத்திய வாழ்க்கை இயல்பானதாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. காதலிப்பவர் தன்னுடைய மனதில் உள்ள அனைத்தையும் உங்களிடம் ஒளிவு மறைவின்றி கூறுவதன் மூலம், அவரை நன்கு புரிந்து கொள்வீர்கள். இதன் விளைவாக உங்கள் உறவு அற்புதமானதாக மாறும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

சில அபாயமான முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அது உங்கள் தொழிலுக்கு அவசியமானதாக இருக்கும். இது நல்ல பலனைத் தரும். வியாபாரம் வேகமெடுக்கும். அதன் மூலம் மனநிறைவு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்ய விரும்புவோர், கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால் முதலீட்டின் மூலம் பயனடையலாம். வேலை செய்பவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும்.

மகரம்: இந்த வாரம் ஓரளவு நற்பலனைத் தரும் வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை அன்யோன்யமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் காதல் கலந்து உணர்சிப்பூர்வமாக பேசுவீர்கள். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. காதல் திருமணம் கைகூடும். வார முற்பகுதியில் சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆனால், அதன் பிறகு நிலைமை சீராகும். இருப்பினும், பொருளாதார ரீதியாக பலவீனமாகவே இருக்கும். வருமானத்துடன் ஒப்பிடுகையில் செலவு அதிகமாக இருக்கும்.

வேலையில் நிலைமைகள் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். தொழில் பார்ட்னருடன் வலுவான உறவைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். மாணவர்களுக்கு சாதகமான நேரமிது. படிப்பில் சிறந்த பலன்களுடன் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். கிரக நிலை காரணமாக, உங்களுக்குள் டென்ஷன் அதிகரிக்கலாம். சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. காதலிப்பவர்களுக்கு சாதகமான வாரமிது. காதலிப்பவர் உங்களுக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார். நீங்களும் அவருக்கு துணையாக இருப்பீர்கள்.

வாரத் தொடக்கத்திலேயே, பெரிய அளவிலான நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பீர்கள். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். இதன் காரணமாக வீட்டுச் செலவுகளுக்கு பணம் செலவழிக்கப்படலாம். வேலை செய்பவர்கள் செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால், வெற்றியடைவார்கள், எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மீனம்: இந்த வாரம் மங்களகரமான வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண உறவுக்கிடையே ஈகோவுக்கு வேலையில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசி உறவில் குவிந்துள்ள ஈகோ என்னும் தூசியை அகற்ற வேண்டும். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த நேரத்தில் காதலிப்பவரின் தேவையற்ற கோபத்தால் சிக்கலில் சிக்கக்கூடும்.

அவற்றை விளக்க உள்ளன்போடு பேசுவது நல்லது. வாரத் தொடக்கத்திலேயே வியாபாரத்தை விரைவுபடுத்த முயற்சிப்பது நல்லது. தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தொலைதூரப் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் தொழில் ரீதியான உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். அவை நன்மைகளைத் தரக்கூடும். வேலை செய்பவர்கள் வேலையில் கவனம் செலுத்தி முன்னேறுவது நல்லது. மாணவர்கள் தற்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details