தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Weekly Horoscope: மே 3 வது வாரத்திற்கான ராசிபலன் - மே மாதம் 3 வது வாரத்திற்கான ராசிபலன்

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான மே 15 முதல் மே 21 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களை காண்போம்.

இந்த வாரத்திற்கான ராசிபலன்
இந்த வாரத்திற்கான ராசிபலன்

By

Published : May 16, 2022, 7:15 AM IST

மேஷம் :மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதாரண வாரமாகவே இருக்கக்கூடும். வாரத் தொடக்கத்தில், உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். புதிதாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். சில புதிய திட்டங்களையும் தீட்டுவீர்கள், இது அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கலாம்.

நீங்கள் எதிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்களில் சிலர் லாபம் பெறலாம், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

காதலர்களுக்கு இந்த வாரம் போராட்டமான வாரமாக அமையும். இந்த வாரம் திருமணமானவர்களுக்கு அன்பைப் பரிமாறும் வாரமாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம் :ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆதாயமான வாரமாக இந்த வாரம் அமையக்கூடும். உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பொன்னான வாய்ப்பை இழக்கச் செய்யும் தேவையற்ற பதட்டங்களை தவிர்க்க வேண்டும்.

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நல்ல நேரமும் கெட்ட நேரமும் வாழ்க்கையின் ஒரு பகுதியானவை, அவை வந்து செல்லும். எனவே, எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். வார நடுப்பகுதியில் உங்கள் வணிகத்தைப் பற்றி நீங்கள் தீவிரமாக சிந்திக்கலாம், இது உங்களுக்கு இலாபங்களை காட்டக்கூடும். வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாக அமையும்.

உங்கள் அர்ப்பணிப்பும் முயற்சிகளும் உங்கள் வேலையை மகிமைப்படுத்தக்கூடும். திருமணமானவர்களுக்கும் நல்ல வாரமிது. உங்களில் சிலர் உங்கள் ஈகோவால் வாழ்க்கைத் துணையிடம் ஏதாவது தகராறு செய்யலாம். காதலர்களுக்கு நல்ல வாரமிது. அன்பும் விசுவாசமும் உங்களிடம் அதிகமாக தென்படும். இது பயணத்திற்கு ஏற்ற வாரமல்ல. மாணவர்களுக்கு இது சிறந்த வாரமாக அமையும்.

மிதுனம் :மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களில் பலருக்கு பொதுவான முடிவுகள் கிடைக்கும் வாரமாக அமையும். உங்களில் பலர் உங்கள் கவலைகளிலிருந்து வெளியே வர முயற்சி செய்வீர்கள். மன அழுத்தம் குறையலாம். உங்கள் பிள்ளைகளுக்கு கடமைகளை நிறைவேற்றுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையை சுறுசுறுப்பாக மாற்ற எந்த முயற்சியையும் எடுப்பீர்கள்.

காதலிப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் கூட்டாளரின் செயல்பாடுகளை நன்கு கவனிப்பீர்கள், இது உங்கள் கூட்டாளரைப் பற்றி அறிய உதவும். வேலைசெய்பவர்களுக்கு நல்ல வாரமிது. உங்கள் வேலையில் கடினமாக உழைப்பீர்கள். உங்களில் பலர் உங்கள் முன்னேற்றத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது.

வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம். உங்கள் வேலையில் நீங்கள் முன்னோக்கிச் செல்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம். உங்களில் சிலர் நோய்வாய்ப்படலாம். பருவகால நோய்கள் ஏற்படும் காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல வாரமிது, அவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம் :கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சராசரி லாபம் கிடைக்கும். வீட்டில் உள்ள முதியவரின் உடல்நலம் மோசமடைவதைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். முதியவருக்கு மன ஆறுதலைக் கொடுப்பதன் மூலம் நீங்கள் மனஅமைதியைப் பெறலாம், ஏனெனில் உங்களது வார்த்தை அவரது ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடும்.

காதலிப்பவர்கள் உறவில் ஒரு புரிதலை உணரலாம். உங்கள் உறவைப் பற்றி நீங்கள் புரிந்துக் கொள்வதால், ஒருவருக்கொருவர் நெருக்கமடைவீர்கள். திருமணமான தம்பதிகள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த வாரம் மன அழுத்தம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாரமாக இருக்கக்கூடும்.

சில அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையை கேட்ட பிறகு வேலையை தொடர்வது நல்லது. வேலைசெய்பவர்களுக்கு நல்ல வாரமிது. நல்ல முடிவுகளை பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதுடன் உங்கள் போட்டியாளர்களையும் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வார நடுப்பகுதியில் பயணம் செய்வது நல்லது.

சிம்மம் :சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல நல்ல பலன்களைத் தரும் வாரமாக அமைகிறது. பயணம் செய்வதன் மூலம், மனஅமைதியைப் பெறுவீர்கள். நீங்கள் சில புதிய வேலையைத் தொடங்குவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. வேலை விஷயத்தில் நீங்கள் சில பெரிய முடிவுகளை பெறுவீர்கள்.

உங்கள் விரைவான பதில்கள் மற்றும் வேலை திறன் உங்களை முன்னோக்கி வைத்திருக்கக்கூடும். நீங்கள் பெரிய பதவியைப் பெறுவதற்கு போதுமான அதிர்ஷ்டத்தைக் கொண்டிருப்பீர்கள். பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் தொழில் புரிபவர்கள் தங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படலாம். அமைதியாக இருப்பது நல்லது. காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. உங்களுக்கிடையில் காதல் பெருக்கெடுக்கும், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி விவாதம் செய்வீர்கள். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

கன்னி :கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைக் கொண்ட வாரமாக அமையும். வாரத் தொடக்கத்தில், ஆரோக்கியமற்ற உணவை உண்பது உங்கள் உடல்நிலையை மோசமாக்கும் என்பதால், உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். வார நடுப்பகுதியில், நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் மற்றும் மிக முக்கியமான வேலையைச் செய்வீர்கள்.

வார இறுதியில், நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள், அவர்களுக்கான உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். அந்த வேலையைச் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் முயற்சிகள் உங்களுக்கான இலக்கை அடைய வழிநடத்தக்கூடும். தொழில்புரிபவர்கள் தங்கள் வேலையை அதிகரிப்பதற்கான முயற்சிகளால் ஆதாயமடைவார்கள்.

நீங்கள் விரும்பினால் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம் மற்றும் புதிய விதிமுறைகளைச் சேர்க்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல வாரமிது. சிலர் காதலில் விழ வாய்ப்புள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ளலாம். காதலிப்பவர்களுக்கு இது சாதாரண வாரமாகவே அமையும்.

உங்களுக்குள் எந்த சண்டையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

துலாம் :துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு இது சுமாரான வாரமாகும். நிறைய ஆதாயங்கள் கிடைக்கும் என்பதால் நீங்கள் மனதளவில் மிகவும் சுறுசுறுப்பாக மாறலாம். வேலையில் உங்கள் முயற்சிகள் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவார்கள்.

அது நல்ல முடிவுகளை உருவாக்கும். தொழிலதிபருக்கு நல்ல வாரமிது. உங்கள் வேலைப்பளு அதிகரிக்கலாம். மேலும், நீங்கள் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் குடும்ப வாழ்க்கையை நன்றாக வைத்திருக்க நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் வாழ்க்கைத்துணை எதையும் கேட்க தயாராக இல்லாமல் இருக்கலாம். நீங்கள் உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், நீங்கள் அவர்களுடன் பணிவாகவும் அன்புடனும் பேச வேண்டும். காதலர்களுக்கு சாதாரண வாரமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் உறவை கவனித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாதாரண முடிவுகளைப் பெறுவார்கள். வார இறுதி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம் :விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு இது ஒரு சாதாரண வாரமாகும். எந்தவொரு பெரிய வேலையையும் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம், பெரிய செலவுகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வார நடுப்பகுதி எல்லாவிதமான வேலைக்கும் ஏற்றதாக இருக்கலாம்.

அதன்மூலம் நீங்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் உற்சாகமாக இருக்க வாய்ப்புள்ளது. வேலைசெய்பவர்களுக்கு நல்ல வாரமிது. தங்கள் வேலையைத் திறம்பட முடிப்பார்கள். மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம். தொழிலதிபர்களுக்கும் நல்ல வாரமிது. உங்கள் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும்.

மேலும் அவற்றிலிருந்து நீங்கள் லாபத்தையும் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உற்சாகத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்தத் தவறான காரியத்தையும் செய்து விடாதீர்கள். காதலர்களுக்கு அருமையான வாரமிது. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள், மேலும் அனுபவித்து படிப்பார்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு :தனுசு ராசி நேயர்களே, எளிய பலன்களைக் கொண்ட வாரமிது. உங்கள் வருமானம் சாதாரணமாக இருக்கும், மேலும் உங்கள் செலவுகள் குறையும், அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். உங்கள் கைகளில் நிறைய பணம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ஆனால் சில சிறிய பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் தோள்கள் அல்லது மூட்டுகளில் வலி ஏற்படலாம். குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு இது நல்ல வாரமல்ல. எனவே அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திருமணமான தம்பதிகளுக்கு நல்ல வாரமிது. வேலைசெய்பவர்கள் தங்கள் வேலையில் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற்று செயல்படுவார்கள். நீங்கள் ஒருவரிடமிருந்து சாபம் பெறலாம். உங்கள் எதிரிகள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்ய நல்ல நேரமிது. படிப்பில் ஆர்வமாக இருக்கும் மாணவர்கள் பல நன்மையைப் பெறுவார்கள். வாரக் கடைசி நாள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம் :மகர ராசி நேயர்களே, உங்களுக்கு இது நல்ல வாரமாகும். நீங்கள் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள், எனவே உங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் நீங்கள் மற்றவர்களிடமிருந்து பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் வேலைசெய்வது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் பதற்றம் குறையக்கூடும், எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் பதற்றமாக இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு ஒரு சாதாரணமான வாரமாக அமையும்.

இதயப்பூர்வமான காதல் என்று எதையும் நினைக்காதீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள். கடினமாக உழைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்களுக்கு சற்று கடினமான நேரமிது, நன்கு படிக்க வேண்டும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது

கும்பம் :கும்ப ராசி நேயர்களே, இது உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. உங்கள் திட்டங்களின் மீது மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், அவற்றிலிருந்து நீங்கள் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு இருப்பதால் நீங்கள் உங்கள் உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. பண ஆதாயம் இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமணமானவர்கள் தங்கள் உறவில் மனஅழுத்தங்களை சந்திக்க நேரிடும். உங்கள் உறவில் இடைவெளியைக் கொண்டு வரக்கூடிய எந்தவொரு செயலையும் செய்யாமால் இருப்பது நல்லது.

காதலிப்பவர்கள் தங்கள் உறவில் முன்னேற்றம் அடைவார்கள். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக உங்களுக்கு இடையே வாக்குவாதம் வரலாம், அத்தகைய நிலையை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் தங்களின் செயல்திறனைக் காட்டுவார்கள். ஆனால் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் உங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

எனவே, விழிப்புடன் இருந்து உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். எனினும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைசெய்பவர்களும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க வேண்டும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

மீனம் :மீன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு அதிக லாபம் இருக்காது. உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம், இந்த நேரத்தில் நீங்கள் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதை நிறுத்துங்கள். வார நடுப்பகுதியும் இறுதியும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் வரலாம். ஆன்மீகத்தில் தீவிர ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வருமானம் சாதாரணமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பர்களுக்கு உடல்நிலை மோசமடையலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் உறவில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.

காதலிப்பவர்கள் தங்கள் துணையின் ஆதரவைப் பெறலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். எனவே, இந்த வாரம் நன்றாக இருக்கும். வார ஆரம்ப நாட்களைத் தவிர, பிற அனைத்து நாட்களும் பயணத்திற்கு ஏற்றதாகவே இருக்கும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details