தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்கான ராசிபலன்... - ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான (ஆகஸ்ட் 14 - 20) வார ராசிபலன்களை காண்போம்.

Weekly Astrology prediction  August third week weekly horoscope  weekly horoscope  astrology prediction  ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்கான ராசிபலன்  வார ராசிபலன்  ராசிபலன்  வாராந்திர ராசிபலன்
Weekly Horoscope

By

Published : Aug 14, 2022, 10:15 AM IST

மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலனைத் தரும் வாரமாகும். திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள், அது உங்களுக்கு ஒரு அற்புதமான உணர்வைத் தரக்கூடும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாகும். பரஸ்பர உரையாடல் மூலம் தாங்கள் காதலிப்பவரின் இதயத்தை வெல்ல முடியும்.

வாரத் தொடக்கத்தில், ஒரு நீண்ட பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம். விரோதிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில் தீங்கை விளைவிக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். சில சிறிய செலவுகள் இருக்கலாம், ஆனால் அதனால் தொந்தரவுகள் ஏதும் இருக்காது.

குடும்பத்தில் புதிய வேலைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒரு புதிய செயல்பாடும் இருக்கலாம். அந்த வேலையைச் செய்பவர்களுக்கு நல்ல வேலைக்கான வெகுமதிகள் கிடைக்கலாம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் இந்த வாரம் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கும். அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தங்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். உங்கள் உடல்நலம் மேம்படலாம். நீங்கள் பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

ரிஷபம்:உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் எதிர்காலத்திற்கான முடிவுகளையும் எடுக்கலாம்.

திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சவால்களுடன் தொடர்ந்து முன்னேறக்கூடும். இந்த நேரத்தில் அதிகரித்து வரும் செலவுகளின் மீதும் நீங்கள் கவனம் கொள்ள வேண்டியிருக்கலாம். செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வாரத் தொடக்கத்தில், உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலையையும் உங்கள் குடும்பத்தையும் சமநிலையில் வைத்திருக்க முடியும், மேலும் வேலையை இணக்கமாகத் தொடர்வீர்கள். இந்த சமநிலை உங்கள் வேலையை எளிதாக்க பயனளிக்கும். எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

நீங்கள் சில தேவையற்ற விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். இதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் அதனால் நீங்கள் தொழில் இலாபம் அல்லது நட்டத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் போகலாம், இது பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் வருமானம் வழக்கம்போல் இருக்கும்.

பணிபுரிபவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.தொழில்புரிபவர்களும் பயனடைவார்கள். மாணவர்கள் தீவிரமாக படிப்பார்கள். இப்போது அவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்:உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு குறுகிய பயணத்திற்குச் செல்லலாம். காதலிப்பவர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், மேலும் உங்கள் காதலியை குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள்.

இந்த வாரம் பயணங்களில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், இது உங்களுக்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். வேலை தொடர்பாக நீங்கள் பல இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கலாம். விளக்கக்காட்சிகளையும் வழங்க வேண்டியிருக்கலாம். தொழில்புரிபவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டியிருக்கலாம். சில பிரச்சினைகள் வரலாம், ஆனால் உங்கள் முயற்சிகளால், அவை போய்விடும்.

மாணவர்களுக்கு புதிதான பலன் எதுவுமில்லை. நீங்கள் படிக்கத் தொடங்குவீர்கள், உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் உங்கள் உணவில் அக்கறை கொள்வது நல்லது. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கடகம்: இது உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமாகும். திருமணமானவர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும் காதலும் மோதலும் கலந்த வாழ்க்கையைக் கொண்டிருக்கலாம். காதலிப்பவர்களுக்கு அவர்களுடைய காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். நீங்கள் காதலிப்பவருடன் ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்லலாம். வாரத் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், ஆனால் நீங்கள் எதைப்பற்றியாவது கவலைப்படலாம்.

வார நடுப்பகுதியில் மகிழ்ச்சி கூடும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதன் காரணமாக பல வேலைகளைச் செய்வீர்கள். இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். உங்கள் வருமானம் அதிகரிக்கும், செலவுகள் குறையும். இது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தக்கூடும். வேலையில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.

உங்கள் முதலாளியும் உங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைவார். சிலர் அரசாங்கத்திடமிருந்தும் நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் புரிபவர்களுக்கும் நல்ல வாரமிது. நீங்கள் புதிய இடங்களில் உங்கள் வேலையைத் தொடங்கலாம் அல்லது சில புதிய நபர்களுடன் ஒப்பந்தம் செய்யலாம்.

மாணவர்களுக்கு படிப்பது எளிதாக இருக்கும். நீங்கள் படித்து மகிழ்வீர்கள். மனக் கவலையின் தாக்கம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், தியானத்தின் மூலம் நீங்கள் பயனடையலாம். வாரத்தின் முதல் நாள் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சிம்மம்: உங்களுக்கு பொதுவான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், உங்கள் உறவு மேம்படும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். வார நடுப்பகுதியில் உங்கள் மாமனார்-மாமியாரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். வாரத் தொடக்கத்தில், உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வியாபாரம் செழிப்பாக இருக்கும். கடல்வழி பயண தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.

வார கடைசி நாட்களில் நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். இப்போது பெரிய தொழில் துவங்க நினைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், பணிச்சுமையும் அதிகரிக்கும். நீங்கள் அதிக பொறுப்புகளையும் அதீத சக்தியையும் பெறுவீர்கள்.

இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்லது நடக்கலாம். மாணவர்களுக்கு நல்ல நேரமிது. உங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி:உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. வார நடுப்பகுதியில், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்வீர்கள். அதன் முடிவுகளையும் நீங்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையும் மகிழ்ச்சியாக இருப்பார். எல்லா வழிகளிலும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவரும் முயற்சி செய்வார். வாரக் கடைசி நாட்களில், உங்கள் மனம் மதம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் கொள்ளும். நீங்கள் உங்கள் மாமனார்-மாமியாரிடம் அனுசரனையாகப் பேசுவீர்கள்.

காதலிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. இந்த நேரம் காதலுக்கு பொருத்தமானது அல்ல, எனவே குறைந்தபட்சமாகப் பேசுங்கள். எந்த சண்டையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிரிகள் வாரத் தொடக்கத்தில் உங்களைத் தொந்தரவு செய்யலாம், எனவே கவனமாக இருங்கள்.

வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். உங்கள் வேலையில் உங்களின் பலம் தெரியும். எனவே நீங்கள் புதிய ரிஸ்க் எடுக்க விரும்பலாம், மேலும் ஒரு பெரிய வேலையைச் செய்ய விரும்பலாம். அந்த வேலையைச் செய்பவர்கள் தங்கள் வேலையில் நிபுணர்களாகவும் இருக்கலாம். அவர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வதில் எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாலிப்பவராக இருக்கலாம்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திணரலாம். எனவே, அவர்கள் தியானத்திற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கும் பயனளிக்கும். உங்கள் உடல்நலத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. வாரக் கடைசி நாள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. திருமண வாழ்க்கையில் பதற்றமும் குறையத் தொடங்கும். உங்கள் உறவில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் நிறைய பேசுவீர்கள். ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்வீர்கள். இது உறவையும் அன்பையும் ஆழமாக்கும்.

வார நடுப்பகுதியில் உங்கள் கவலைகள் அதிகரிக்கக்கூடும். நீங்கள் கவனமாக வேலை செய்தால், வெற்றியைப் பெறலாம். தொழில்புரிபவர்கள் தங்கள் வேலைகளை வேகமாகச் செய்வார்கள். இது உங்கள் உற்சாகத்தை மீண்டும் கொண்டு வரக்கூடும். நீங்கள் வேலையை வேகமாக முன்னெடுத்துச் செல்லலாம். இலாபம் அதிகரிக்கும், வருமானமும் வலுப்பெறும். செலவுகள் குறையக்கூடும், எனவே நிதி நிலைமை மேம்படத் தொடங்கும்.

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அவர்கள் தங்கள் படிப்பிலிருந்து நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்களின் கடின உழைப்பு பலனளிக்கும். முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால் மார்பு இறுக்கம் அல்லது சளி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது. வாரக் கடைசி நாட்களில் பயணம் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்:உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். குடும்பப் பொறுப்புகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டியிருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் நேரமும் உதவியும் தேவைப்படலாம். நீங்கள் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அவர்களுக்கு உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எனவே நீங்கள் திருப்தியடைவீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சில ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து செல்வதாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு உங்கள்மீது கோபம் வரலாம்.

இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு இனிமையான வாரமாக இருக்கும். வியாபாரிகளுக்கும் நல்ல வாரமிது. அவர்கள் சிறந்த முடிவுகளைப் எடுப்பார்கள். நீங்கள் வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். இந்தப் பயணத்தின் மூலம் நீங்களும் நன்மை அடைவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு இந்தவாரம் நன்றாக இருக்கும். இடமாற்றம் செய்வீர்கள். ஆனால் இந்த இடமாற்றம் உங்களுக்கு சில நல்ல வேலைகளைத் தரக்கூடும். மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென நினைக்கலாம். அவர்கள் படிப்பிலும் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். எந்தவிதமான நோயும் ஏற்படாது. வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

தனுசு: உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடன்பிறப்புகளுடன் நேரத்தைக் கழிக்கலாம். இதன் காரணமாக, உங்கள் உறவிற்கு இடையேயுள்ள பதட்டம் குறையலாம். இது உங்களுக்கு மன அமைதியைக் கொடுக்கலாம். காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது. உடல் உழைப்பின் அடிப்படையில் நீங்கள் எல்லோருக்கும் உதாரணமானவர்.

தொழில் புரிபவர்கள் தங்கள் கடின உழைப்பை அதிகரிப்பதன் மூலம் இலாபங்களையும் அதிகரிக்கக்கூடும். உங்கள் வேலையை நன்றாகச் செய்து முடிப்பீர்கள். இது இந்த வேலையில் உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தக்கூடும். மாணவர்கள் படித்து மகிழ்வார்கள். அவர்கள் விரைவில் நிறைய கற்றுக்கொள்வார்கள். அவர்கள் கடினமாக படிப்பார்கள், இது போட்டியில் வெற்றி பெற வழிவகுக்கும்.

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த பெரிய நோயும் ஏற்படாது. பயணத்திற்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். கடைசி நாட்களில் மட்டும் எந்த பெரிய பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.

மகரம்: உங்களுக்கு பொதுவான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களுக்கு குடும்பத்தைப் பராமரிக்கும் நேரமாக இருக்கலாம். காதலிப்பவர்கள் தாங்கள் காதலிப்பவரையே தங்களின் வாழ்க்கைத் துணையாக மாற்ற முடியும். எனவே அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதலிப்பவரையும் சந்தோஷப்படுத்த முயற்சிப்பார்கள்.

உங்கள் உறவில் அன்பை அதிகரிக்க முயற்சிக்க வேண்டியிருக்கலாம். உங்கள் உறவில் உள்ள தேக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். அவர்கள் உங்கள் வேலையில் உங்களுக்கு உதவலாம்.

வியாபார ரீதியான பயணம் நல்ல லாபத்தைத் தரக்கூடும். உங்கள் வியாபாரம் வேகமாக வளரக்கூடும். உங்கள் திறமையும் புத்திசாலித்தனமும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை செய்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் நம்பிக்கை வலுவானதாக இருக்கும், உங்கள் நண்பர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை நீங்களே அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். குறிப்பிட்ட உடல்நலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இருக்காது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற வாரமிது.

கும்பம்:இந்த வார ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் தாயின் உடல்நலம் மோசமடையக்கூடும். இதனால் குடும்பத்தில் பதற்றம் ஏற்படலாம். நீங்கள் கோவிலுக்குச் செல்லலாம். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கும் இனிமையான வாரமிது.

வாரத் தொடக்கத்தில், நீங்கள் ஒரு பெரிய தொகையைப் பெறுவீர்கள். வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். சில புதிய முதலீட்டு விருப்பங்களைப் பற்றியும் நீங்கள் சிந்திக்கலாம். தொலைதூர பகுதிகள் மற்றும் மாநிலங்களுடன் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் பெறும்போது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். மாணவர்கள் எந்த சிரமமுமின்றி நன்றாகப் படிப்பார்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்: உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும், ஆனால் வாரத் தொடக்கத்தில் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படலாம், உங்கள் பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்து கண்ணீர் விடலாம். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கலாம். ஒருவருக்கொருவர் காதலையும் ஈர்ப்பையும் கொண்டிருக்கலாம். இவை உங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக்கும்.

காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது. நீங்கள் காதலிப்பவருக்கு உங்கள் மீது அன்பு அதிகரிக்கலாம். உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவக்கூடும், மேலும் உங்கள் அறிவைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வேலையில் சிறந்து செயல்படுவீர்கள்.

நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். இதன்மூலம் உங்கள் மேலதிகாரிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு உயர்ந்ததாக இருக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் தொழிலுக்காக நிறைய செலவழிக்க வேண்டியிருக்கலாம்.

ஒரு பெரிய நிறுவனத்தில் சேர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென நினைக்கலாம். ஆய்வுகளின் சாதகமான முடிவுகளும் வெளிவரலாம். உடல்நலப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. வறுத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 14 இன்றைய ராசி பலன்

ABOUT THE AUTHOR

...view details