பாட்னா: பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பிகார் மாநிலம் சமஸ்டிப்பூர் மாவட்டம் கோபர் சித்தா கிராமத்திலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
வெள்ளம் சூழ திருமணம்... படகில் ஊர்வலம் - சமஸ்டிப்பூர் மாவட்டம்
பொதுவாக ஆற்றைக் கடப்பதற்குத்தான் படகுகள் பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு புதுமணத் தம்பதி, திருமணம் முடிந்த கையோடு படகில் அமர்ந்து ஊரை சுற்றி ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர்.
வெள்ளம் சூழ திருமண ஊர்வலம்..
இந்நிலையில் அக்கிராமத்தில் திருமணம் முடிந்த புதுமண தம்பதி படகில் ஊர்வலம் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி ஊரை சுற்றி வருவது அக்கிராமத்தின் வழக்கம்.
ஆனால் கிராமம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுவதால் மணமகன், மணமகள் இருவரும் ஊர்வலம் செல்வதற்காக மூன்று படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மணமக்கள் உறவினர்கள் புடைசூழ படகில் அமர்ந்து ஊர்வலமாக சென்றனர்.