கயா: பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் வர்மா கடந்த சில மாதங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று(டிச.25) திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐசியுவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என பூனம் வர்மா கேட்டுள்ளார்.