அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன் பஞ்சாப் புலனாய்வுத்துறையினரால் கடத்தல் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் பெரோஸ்பூர் எல்லையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைக்கு அனுப்பப்பட்டதாக டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்ட பின்னர் துணை காவல் ஆணையர் அமர்ஜித் சிங் பஜ்வாவின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழு பெரோஸ்பூருக்கு சென்றது. சந்தேகிக்கப்படும் இடங்களில் புலனாய்வுத்துறை குழு நடத்திய ஆய்வில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.