தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்- பாஜக - அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம்

அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் ரன்ஜீத் குமார் தாஸ் கூறினார்.

State BJP chief Ranjeet Kumar Dass Implementation of CAA Assam assembly elections CAA in Assam அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு சிஏஏ ரன்ஜீத் குமார் தாஸ் அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் பாஜக
ரன்ஜீத் குமார் தாஸ்

By

Published : Mar 22, 2021, 2:12 PM IST

மஜூலி (அஸ்ஸாம்): சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர் ரன்ஜீத் குமார் தாஸ் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு நாங்கள் என்றென்றும் துணை நிற்கிறோம். அஸ்ஸாமில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், CAA சட்டத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் நிறைவேறியதும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நாங்கள் செயல்படுத்துவோம். தேர்தல் நேரத்தில் கூட இந்த விவகாரத்தில் நாங்கள் பின்வாங்க போவதில்லை” என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “நான் சவால்விட்டு சொல்கிறேன், ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதுவும் தெரியாது. ராகுல் காந்தியை காட்டிலும் அவரது கட்சியிலுள்ள அடிமட்ட தொண்டர்களுக்கு சிஏஏ குறித்து அதிகம் தெரிய வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும், “வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் அஸ்ஸாமில் உள்ளனர். அவர்களால் பெரிய பெரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி சிஏஏ 2019 மக்களவை தேர்தலிலும் எதிரொலித்தது. ஆனாலும் நாங்கள் கூடுதலான தொகுதிகளில் வென்றோம்” என்றார்.

126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details