சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் - Fuel Price Cut To LPG Subsidy
19:17 May 21
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும். இந்த திட்டம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என ரூ. 200 மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலையில் ரூ.9.50, டீசல் விலையில் ரூ.7 குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.