தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை கட்டுப்படுத்த சைக்கோக்கள் தேவையில்லை: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் - பிரதமர் அலுவலக சைக்கோ

கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் அலுவலக சைக்கோக்கள் தேவையில்லை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி
சுப்பிரமணிய சுவாமி

By

Published : May 5, 2021, 8:28 PM IST

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், நாட்டில் கரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன் தெரிவித்துள்ளார். கரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, கரோனா மூன்றாம் அலை குழந்தைகளைக் குறிவைக்கும் என எச்சரித்தேன். இந்தச் சூழலில் பிரதமர் அலுவலக சைக்கோக்களுக்கு பதிலாக தீவிர நெருக்கடி மேலாண்மை குழு கண்காணிப்பில் ஈடுபட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிதி ஆயோக் உறுப்பினர் கூற மூன்றாம் அலையால் ஏற்படும் அபாயம் குறித்து இன்று தெரிவிருந்திருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை கட்டணங்களை நெறிப்படுத்தவேண்டும்: கமல் ஹாசன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details