தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதிப்பீடு தவறாகிவிட்டது! - தேர்தல் தோல்விக்கு ஃபட்னவிஸ் ஒப்புதல்! - தேர்தல் தோல்விக்கு ஃபட்னவிஸ் ஒப்புதல்

மும்பை: சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை தவறாக மதிப்பிட்டுவிட்டதாக மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

fadnavis
fadnavis

By

Published : Dec 5, 2020, 11:14 AM IST

மகாராஷ்டிர மேலவையில் 6 இடங்களுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணி (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) நான்கு இடங்களை கைப்பற்றியது. பாஜக ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ், “ மகாராஷ்டிர மேலவை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிக வெற்றியை எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு இடத்தில் மட்டுமே பாஜகவால் வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஆளும் மூன்று கட்சிகள் கூட்டணியை நாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டோம் “ என்றார்.

இதேபோல், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, நடந்து முடிந்த தேர்தலில் சிவசேனா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அரசை கவிழ்க்க பாஜக எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என்றும், மகா விகாஸ் அகாதி கூட்டணி தானாகவே கவிழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் தேர்தல்... பாஜக அசுர வளர்ச்சி: 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்கு யோகி நன்றி!

ABOUT THE AUTHOR

...view details