மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு ஆட்சி செய்துவருகிறது. தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை கிடைக்கவில்லை.
பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் கொள்கை ரீதியாக இரு துருவங்களில் பயணித்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்தப் பின்னணியில், மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், தங்களுக்கு சிவசேனாவுக்கும் கருத்து முரண் மட்டுமேதான் உள்ளது. நாங்கள் எதிரிகள் இல்லை. நாங்கள் இருவரும் தேர்தலை இணைந்துதான் சந்தித்தோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பட்னாவிஸ் கருத்து குறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராவத், பாஜகவும் சிவசேனாவும் இந்தியா - பாகிஸ்தான் அல்ல. ஆமீர் கான் - கிரண் ராவ்போல் பிரிந்திருக்கிறோமே தவிர நட்பு உயிரோடுதான் இருக்கிறது என பதிலளித்தார்.
இதையும் படிங்க:அகிலேஷ் யாதவை குறிவைத்து 42 இடங்களில் சிபிஐ சோதனை