தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வழக்கு விசாரணை :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் - எஸ்.ஏ. பாப்டே வருத்தம்

பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையில் போது தாம் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்படே தெரிவித்துளளார்.

Chief Justice Sharad Arvind Bobde
Chief Justice Sharad Arvind Bobde

By

Published : Mar 8, 2021, 3:13 PM IST

Updated : Mar 8, 2021, 4:14 PM IST

ஹரியானவைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று(மார்ச்.8) நடைபெற்றது. உறவினரால் பாலத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த சிறுமி கர்பமாக உள்ளார் எனவும், அவரது கருவை கலைக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்படே தலைமையிலான அமர்வு, கருக்கலைப்பு தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கையை கேட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு உயரிய மதிப்பை உச்ச நீதிமன்றம் அளிக்கும் என தெரிவித்த தலைமை நீதிபதி, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி, பாலியல் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடர்பான அமர்வு, அவ்வழக்கு தொடர்பாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட நபரிடம், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வாதத்தின் போது கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே விளக்கமளித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரிடம் "நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்களா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அது "நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களா?" என திரிக்கப்பட்டு செய்தி வெளியானதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:'சுந்தர் பிச்சையின் மகளிர் தின பரிசு' - கிராமப்புற பெண்களுக்காக ரூ.182 கோடி

Last Updated : Mar 8, 2021, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details