ஹைதராபாத்:தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம் சாட்டினார். 'காவலர்கள்' என்று கூறிக்கொள்ளும் பாஜக, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது என்றார். அண்மையில் ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலை மேற்கோள் காட்டி, "நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் 19,40,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும் "இந்த நாட்டு மக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து விட்டு செல்லும் போது, இந்த நாட்டில் 'காவலர்களாக இருப்போம் என்று கூறும் மக்களும், கட்சியும், அரசும் தூங்கிக் கொண்டிருந்ததை நாம் இப்போது உணர வேண்டும். அவ்வாறு தூங்கும் காவலர்கள் தேவையில்லை. நமது நாட்டின் செல்வம் இந்த நாட்டில் நிலைத்திருக்க, 'ஜிம்மேதார் நேதாஸ்' (பொறுப்புள்ள தலைவர்கள்) தேவை," என கூறினார்.