தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஊக்கத்தொகை வேண்டாம்... தரமான பிபிஇ கிட் போதும்' - செவிலியரின் ஆடியோ வைரல் - pudhucherry nurse audio

புதுச்சேரி அரசு மருத்துமனையில் பணியாற்றும் செவிலியருக்குத் தரமான பிபிஇ கிட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவிலியர் ஒருவரின் ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

we-dont-need-beneficiaries-but-need-ppe-kit-nurse-audio-goes-viral-in-social-media
'ஊக்கத்தொகை வேண்டாம்..தரமான பிபிஇ கிட் போதும்'- செவிலியரின் ஆடியோ வைரல்

By

Published : May 23, 2021, 9:06 PM IST

புதுச்சேரி:புதுச்சேரியில் சில நாட்களாக கரோனா தொற்றால் மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அரசு செவிலியர் ஒருவர் பேசிய ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது.

அந்த ஆடியோ பதிவில், "தரமான பிபிஇ கிட் வழங்கவேண்டும் என துணை நிலை ஆளுநருக்கு சுகாதாரத்துறை செவிலியர் கடிதம் எழுதிவிட்டோம். தரமற்ற கிட்டே அணிவதால், ஒரு மணி நேரம் கூட நிற்க முடியவில்லை. 1 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

'ஊக்கத்தொகை வேண்டாம்... தரமான பிபிஇ கிட் போதும்'- செவிலியரின் ஆடியோ வைரல்

தரமான பிபிஇ கிட் வழங்க அரசிடம் மன்றாடி வருகிறோம். அரசு வழங்காததால் கடந்த 2 மாதத்தில் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய், அரசு மருத்துவமனைக்கு ரூ. 58,000 ஸ்பான்சர் மூலம் பெற்று பிபிஇ கிட் வாங்கி கொடுத்துள்ளோம். வேலை செய்யத்தான் வந்து இருக்கிறோம். நாங்கள் வேலை செய்கிறோம். எங்களுக்கு ஊக்கத் தொகை எதுவும் வேண்டாம்.

6 மணிநேரம் கரோனா வார்டில் பாதுகாப்பாக பணியாற்ற தரமான பிபிஇ கிட் போதும். இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகிறார்கள் எனத்தெரியவில்லை. பலர் மனக்கஷ்டத்தில் செல்கின்றனர்" என அக்குரல் வேதனையுடன் முடிவடைகிறது.

இதையும் படிங்க:'காலிப்படுக்கைகள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்' - புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க்

ABOUT THE AUTHOR

...view details