கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிடல்குச்சி பகுதியை சேர்ந்தவர் கஜல் ஷில். இவர் நேற்றிரவு (டிசம்பர் 3) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது மகன் மிதுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே அவரது உடலில் இருந்த காயங்களை கண்ட போலீசார் சந்தேகமடைந்து, மிதுன் மற்றும் அவரது மனைவி சுஜாதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மனைவி மீது சந்தேகம்.. தந்தையை கொலை செய்த மகன்! - மேற்கு வங்கத்தில் தந்தை கொலை
மேற்கு வங்க மாநிலத்தில் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த விசாரணையின்போது சுஜாதா, எனக்கும் எனது மாமனார் கஜல் ஷில்லுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக எனது கணவர் சந்தேகித்தார். இதன் காரணமாக நேற்றிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின், கஜல் ஷில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதன்பின் மிதுனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இறுதியில் தந்தையை சந்தேகம் காரணமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:கண்முன்னே தந்தை சுட்டுக்கொலை.. உடலை மடியில் வைத்து கதறி அழுத மகள்...