சிலிகுரி (மேற்கு வங்கம்):டிசம்பர் 7ஆம் தேதி சிலிகுரி பகுதியில் நடைபெற்ற பேரணியின்போது வன்முறையை ஊக்குவித்ததாக பாஜக மூத்தத் தலைவர்கள் கைலாஷ் விஜய்வர்கியா, தேஜஸ்வி சூர்யா, திலீப் கோஷ் உள்ளிட்டோர் மீது மேற்கு வங்க காவல் துறையினர் புதன்கிழமை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்தனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக நடத்திய பேரணியின்போது, வன்முறையை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கை மீறவும், காவலர்களுடன் மோதவும், அரசு சொத்துகளைச் சேதப்படுத்தவும் ஊக்குவித்ததாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின்பேரில் காவலர்கள் பாஜக தேசிய செயலாளரும் மாநில கண்காணிப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா, எம்.பி.யும், பாஜக தேசிய இளைஞரணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா, மாநிலத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் மீது காவலர்கள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு ஜல்பைகுரி காவல் நிலையத்தில் பதியப்பட்டது. இந்நிலையில், சௌமித்ரா கான், சயந்தன் போஸ், சுகந்தா மஜும்தர், நிசித் பிரமானிக், ராஜு பிஸ்டா, ஜான் பிர்லா, கோகன் முர்மு, சங்கு தேப் பாண்டா, பிரவீன் அகர்வால் உள்ளிட்டோர் மீது காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.