கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் தாராபீத்தை நோக்கி நேற்று (அக். 15) ஹவுரா - மால்டா இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ராம்பூர்ஹாட்டின் சுந்திபூர் பகுதியைச் சேர்ந்த சஜல் ஷேக் (25) என்பவருக்கும், அவருடன் பயணித்த சக பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கைகலப்பாகவும் மாறியுள்ளது.
அப்போது ரயில் ரூம்பூர்ஹாட் ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சஜலை, சக பயணி ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார். பின்னர் அமைதியாக தனது இருக்கையில் வந்து அப்பயணி அமர்ந்துள்ளார். இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.