மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை நேற்று (பிப்ரவரி 12) முதல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஒத்திவைத்த செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்
ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டார். அதில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதாகவும், உண்மையை உறுதி செய்துகொள்ளாமல் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் மனத்தைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் இதையடுத்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறி செயல்படுதாக மம்தா கவலை தெரிவித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் மேலும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட ஆலோசனை வழங்கினார். மாநில சுயாட்சி, உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும். விரைவில் டெல்லியில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மோடி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி மோசடி - ராகுல் குற்றச்சாட்டு