தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம் - சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் மரணம்

சிதல்குச்சி பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் மரணம்
மேற்கு வங்கத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் மரணம்

By

Published : Apr 11, 2021, 12:29 AM IST

சிதல்குச்சி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெகார் மாவட்டத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இறந்தவர்கள் ஹமீதுல் ஹக், மோனிருல் ஹக், சாமியுல் மியா, அம்ஜாத் ஹொசைன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

"உள்ளூர் மக்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியைப் பறிக்கமுயன்றபோது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்" என்று மூத்தக் காவலர் ஒருவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இதயங்களை வென்ற ராணுவ வீரரின் மனிதாபிமானம்!

ABOUT THE AUTHOR

...view details