தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தொடர் பதற்றம்! - Protestors pelted stones

சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை கலைக்க காவல் துறையினர் முயன்று வருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Nov 26, 2020, 12:45 PM IST

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த 33 விவசாய சங்கங்கள் சார்பில் நவம்பர் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரியானா மாநில எல்லை பகுதியில் நேற்று குவிந்தனர். அவர்கள் டெல்லிக்கு பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர்களை தடுக்கும் விதமாக பாஜக ஆளும் ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி - ஹரியானா எல்லையான ஃபரிதாபாத், டெல்லி - ஜம்மு நெடுஞ்சாலை அருகே கர்னல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு காவல் துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் சேவை மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு தீவிரம்

இந்நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் குவிந்த விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து காவல் துறையினர் கலைக்க முயற்சித்தனர். பின்னர், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் அமைதியான வழியில் விவசாயிகள் போராடுவதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அமைதியான வழியில் போராடுவது அரசியலமைப்பு உரிமை" என தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம்

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details