ஹைதராபாத்:ரேவ் பார்ட்டி தொடர்பாக பிக் பாஸ் ஓடிடி 2 வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் நொய்டா நகரில் நடைபெற்ற ரேவ் பார்ட்டி தொடர்பாகப் போதைப்பொருள் தடுப்புத் துறை வனத்துறை மற்றும் நொய்டா காவல் துறையினர் இணைந்து 5 நபர்களைக் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் யூடியூபருக்கு பாம்புகள் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும் 5 நபர்களைக் கைது செய்யும் போது பாம்புகள் மற்றும் பாம்புகளின் 20 மில்லி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்ட்டி ஒன்றில் எல்விஷ் யாதவ் பாம்பைப் பிடித்து விளையாடுவது போன்ற காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி பிரிவுகள் 9, 39, 49, 50, 51 மற்றும் ஐபிசி பிரிவு 120பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்விஷ் யாதவ் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.