தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது ஏன்? - ஓய்வு பெற்ற டிஜிபி பி.கே.ரவி அளித்த விளக்கம்!

BK Ravi: தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்ட ஓய்வு பெற்ற டிஜிபி பி.கே.ரவி சொந்த மாநிலத்திற்காக வேலை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஐபிஎஸ் அதிகாரி பி கே ரவி
சொந்த மாநிலத்திற்காக வேலை செய்ய விரும்புகிறேன்

By ANI

Published : Nov 30, 2023, 1:22 PM IST

பீகார்:ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் வரவிருக்கும் 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் ஆகவும், காவல்துறை இயக்குநராகவும் இருந்தவர் பி.கே.ரவி. இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறிய பி.கே.ரவி தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "தான் காங்கிரஸின் சித்தாந்தத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டதால் அந்த கட்சியில் சேர்ந்தேன். பீகார் எனது சொந்த ஊர், நான் என் சொந்த மாநிலத்திற்காக வேலை செய்ய விரும்புகிறேன். மேலும் மத்திய அரசு பொய்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் அதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக தனது சொந்த தொகுதியான சமஸ்திபூர் தொகுதியில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒருவேளை கட்சி மேலிடம் வேறு ஏதேனும் தொகுதியை ஒதுக்கினால் அங்கும் களமிறங்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: நிலவிற்கு மனிதனை அனுப்பி பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதே குறிக்கோள் - இஸ்ரோ தலைவர் சோமநாத்

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு உதவியாக இருக்கும் எனவும் மோடி அரசு இந்த முறை மீண்டும் ஆட்சிக்கு வராது எனவும் என்றார். குறிப்பாக, மோடி அரசு 2024-ல் மீண்டும் வராது, ஏனென்றால் நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தி பிரதமராகும் வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பி.கே.ரவி, "ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி உள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும். எங்கள் கூட்டணியில் சில வேறுபாடுகள் உள்ளன, ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அதை நாங்கள் சரிசெய்வோம்" என கூறினார்.

இதையும் படிங்க: சனாதன தர்மம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details