டெல்லி:குலாம் நபி ஆசாத், கடந்த 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், தான் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் காங்கிரஸிலிருந்து வெளியேற பிரதமர் மோடிதான் காரணம் எனக்கூறுவது ஒரு சாக்குபோக்கு. காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஜி23 கடிதம் எழுதியது முதலே, காங்கிரஸ் தலைமைக்கு என்னுடன் பிரச்னை உள்ளது.
யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. ஜி23 தலைவர்கள் பரிந்துரை செய்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடியை மிகவும் கடுமையானவர் என நான் நினைத்தேன். ஆனால், அவர் மனிதநேயத்தையே காட்டுகிறார்.