தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் இறையாண்மையில் தலையிட்டால் உங்கள் மொழியிலேயே பதிலடி- அமித் ஷா - இந்திய இறையாண்மை

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக சவால் விடுபவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

Amit Shah
Amit Shah

By

Published : Jul 17, 2021, 2:29 PM IST

டெல்லி : நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சவால் விடுவோருக்கு தெளிவான ஒரு சமிக்ஞையை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்துள்ளார்.

அப்போது, “உங்களது பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார். டெல்லியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) ருஸ்தாம்ஜி நினைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

முன்னதாக போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “எல்லை பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு. எங்களுக்கு பல சவால்கள் உள்ளன. எங்கள் துணை ராணுவப் படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை நம்மிடம் உள்ளது.

நமது இறையாண்மையை சவால் செய்பவர்கள் எவராயினும், அவர்கள் மொழியிலேயே பதிலை பெறுவார்கள். உலக நாடுகளில் இந்தியா வலிமைப்பெற்றுவருகிறது.

டெண்டுல்கர் தேவையில்லை அக்ஷய் குமாரே போதும்- ராஜ் தாக்கரே

நமது வீரர்கள் துணிச்சல்மிக்கவர்கள். நமது துணை ராணுவப் படைகள் 7 ஆயிரத்து 516 கி.மீ கரையோர எல்லையுடனும் 15 ஆயிரம் கி.மீ க்கும் அதிகமான தரை எல்லையையும் பாதுகாத்துவருகின்றனர்.

நீண்ட காலமாக, சில முன்னுரிமைகள் காரணமாக எல்லை பாதுகாப்பு குறித்து எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் அமைந்தபோது, பிரச்சினைகள் ஓரங்கட்டப்பட்டு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கப்பட்டன.

முந்தைய கிழக்கு பாகிஸ்தானில், மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. பெண்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அங்கு மனித உரிமையை நிலைநாட்டி சுதந்திரம் பெற்றதில் பிஎஸ்எஃப் துருப்புக்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

இப்போது வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக உள்ளது. பிஎஸ்எஃப் நிறுவனர் குஸ்ரோ ஃபார்முர்ஸ் ருஸ்டோம்ஜி செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை. என்றென்றும் நினைவு கூரப்படுபவை” என்றார்.

இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேரில் 14 பேருக்கு வீரதீர விருதுகளும், 13 பேருக்கு காவல் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : இந்திய இறையாண்மை மீதான மரியாதை அனைத்துக்கும் மேலானது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details