தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் - ப. சிதம்பரம் - பாலைவனப் பூஞ்சோலை

அக்கறையின்மை மற்றும் மந்தநிலையின் பாலைவனத்தில் நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-June-2021/12175764_1.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-June-2021/12175764_1.JPG

By

Published : Jun 18, 2021, 12:13 PM IST

டெல்லி: நடாஷா நர்வால், தேவாங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

டெல்லி கலவரம் காரணமாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவ செயல்பாட்டாளர்கள் நடாஷா நர்வால், தேவாங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் நேற்று பிணையில் வெளியே வந்தனர். சிஏஏவுக்கு எதிராக போராடி சிறை சென்ற இம்மாணவர்கள் பிணையில் வந்ததற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இம்மாணவர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நடாஷா நர்வால், தேவாங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை மனதார வரவேற்கிறேன். இன்னும் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும். அக்கறையின்மை மற்றும் மந்தநிலையின் பாலைவனத்தில் நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை எனும் பூஞ்சோலை நீங்கள் - ப. சிதம்பரம்

இதையும் படிங்க:பள்ளியில் ரகசிய இடம்: வெளிவந்த பாபாவின் சொகுசு அறை ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details