டெல்லி:நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், இந்தியாவின் தொழில்நுட்பத்துறை வியக்கத்தக்கவகையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இப்போது செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக செயல்பட்டுவருகிறது. அதேபோல நமது நாட்டில் 5G அலைக்கற்றைக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது.
இதன் பலன்கள் விரைவில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய உள்ளது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம் உள்ளிட்டவையை மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாட்டில் 5 சேவை தொடங்கும் என்று தெரிவித்தார். 5G அலைக்கற்றைக்கான ஏலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.