தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் தடுப்பூசி; அனைத்து மாநில ஆளுநர்களுடன் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நாளை ஆலோசனை! - வெங்கையா நாயுடு

கோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் புதன்கிழமை (ஏப்.14) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.

VP Naidu, PM Modi to address Governors of all states on Wednesday VP Venkaiah Naidu Prime Minister Narendra Modi Covid19 vaccination drive கோவிட் தடுப்பூசி ஆலோசனை ஆளுநர்களுடன் ஆலோசனை நரேந்திர மோடி வெங்கையா நாயுடு
VP Naidu, PM Modi to address Governors of all states on Wednesday VP Venkaiah Naidu Prime Minister Narendra Modi Covid19 vaccination drive கோவிட் தடுப்பூசி ஆலோசனை ஆளுநர்களுடன் ஆலோசனை நரேந்திர மோடி வெங்கையா நாயுடு

By

Published : Apr 13, 2021, 4:27 AM IST

டெல்லி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஏப்.14ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்கள். காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின்போது கோவிட் பரவல் தடுப்பு, தடுப்பூசி குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

நாட்டில் நிலவும் கோவிட் பாதிப்புகள் மத்திய- மாநில அரசுகளை கவலையுற செய்யும் வகையில் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு அனைவரும் விரைந்து தடுப்பூசி வழங்கும் விதமாக திக்கா உட்சவ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் ஆளுநர்களுடனாக ஆலோசனையின்போது விவாதிக்கப்படவுள்ளன. தற்போது நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை நிலவுகிறது. திங்கள்கிழமை (ஏப்.12) மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி திக்கா உட்சவ் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 30 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை பெறுவதில் 10 மாநிலங்கள் அதிக முன்னுரிமை காட்டிவருகின்றன.

கரோனா வைரஸ் இரண்டாம் அலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details